Home
News

சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய ஏர்டெல்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?

ஏர்டெல் (airtel) நிறுவனம் தனது ப்ரீபெய்ட் குளோபல் இன்டர்நேஷனல் ரோமிங் (IR) பேக்கின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக இந்த 2026-இல் முதல் கட்டண உயர்வை அறிவித்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது புதிய கட்டண உயர்வு குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ப்ரீபெய்ட் குளோபல் இன்டர்நேஷனல் ரோமிங் (IR) பேக்கின் விலை முன்பு ரூ.4000-ஆக இருந்தது. ஆனால் தற்போது விலை உயர்த்தப்பட்டு ரூ.4999-ஆக உள்ளது. கிட்டத்தட்ட 25 சதவீத வலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இந்த திட்டம் சர்வதேச பயணிகளுக்குக் கொண்டுவரப்பட்ட திட்டம் ஆகும். இப்போது விலை உயர்வைப் பெற்ற இந்த திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய ஏர்டெல்..

ஏர்டெல் ரூ.4999 குளோபல் ரோமிங் பேக் (Airtel Rs 4999 Global Pack)
ஏர்டெல் ரூ.4999 குளோபல் ரோமிங் (IR) பேக் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. முன்பு கூறியபடி, இந்த திட்டம் சர்வதேச பயணிகளுக்குப் பயன்படும் வகையில் உள்ளது. மேலும் இந்த பேக்கில் வெளிநாடுகளில் பயன்படுத்த 5ஜிபி டேட்டா, 100 நிமிட இன்கம்மிங், அவுட்கோயிங் கால்ஸ், 100 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் மற்றும் இலவச இன்கம்மிங் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படுகிறது.

அதே இந்த பேக் இந்தியாவில் பயன்படுத்தினால் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக சர்வதேச ரோமிங் பேக் ரீசார்ஜ் செய்தவுடன் தானாகவே செயல்படும், அதே நேரத்தில் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, காலாவதியான பிறகு டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகள் நிறுத்தப்படும்.

தற்போது இன்டர்நேஷனல் ரோமிங் (IR) பேக் திட்டத்தின் விலை மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது. மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களில் விலை உயர்த்தப்படவில்லை. மேலும் ஏர்டெல் சமீபத்தில் அறிமுகம் செய்த சில கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களையும் இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் சமீபத்தில் ரூ.39 திட்டத்தை (Airtel rs 39 Plan) தான் அறிமுகம் செய்துள்ளது. அதாவது இது ஒரு டேட்டா பேக் ஆகும். நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினசரி 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 3 நாட்கள் ஆகும். ஆகவே ஏர்டெல் ரூ.39 திட்டம் மூலம் மொத்தம் 9ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் ஓடிடி, எஸ்எம்எஸ், வாய்ஸ் கால்கள் நன்மைகள் கிடைக்காது.

குறிப்பாக ஏர்டெல் ரூ.39 திட்டம் டேட்டா பேக் உத்தரபிரதேசம் (கிழக்கு), மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு வட்டங்களில் மட்டுமே வழங்கப்படும். அதாவது தேர்வு செய்யப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினமும் 4ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.இந்த திட்டத்தில் தினசரி 4ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

சத்தமின்றி ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்திய ஏர்டெல்..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), ஆப்பிள் மியூசிக், உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20 ஓடிடி சந்தா கிடைக்கிறது. அதேபோல் 28 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel quietly hikes global prepaid pack price: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X