ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ.. இலவசமாக 5ஜி சேவை வழங்கும் Airtel: உங்கள் மொபைலில் ஆக்டிவேட் செய்வது எப்படி?

|

ஏர்டெல் நிறுவனம் தங்களது பயனர்களுக்கு இலவசமாக 5ஜி சேவை வழங்குவதாக கூறப்படுகிறது. இதை உங்கள் மொபைலில் எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

8 நகரங்களில் 5ஜி சேவை

8 நகரங்களில் 5ஜி சேவை

ஏர்டெல் நிறுவனம் தங்களது 5ஜி சேவைகளை படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. தற்போது 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கிறது. அதாவது டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கிறது. இந்த பகுதியில் உள்ள மக்கள் 5ஜி சேவையை எப்படி ஆக்டிவேட் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.

கூடுதல் கட்டணம் இல்லாமல் 5ஜி சேவை

கூடுதல் கட்டணம் இல்லாமல் 5ஜி சேவை

ஏர்டெல் 5ஜி சேவையை பொறுத்தவரை சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்டெல் பயனர்கள் 5ஜி சேவையை எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தலாம் அனுபவிக்கலாம்.

ஏர்டெல் 5ஜி சேவை 5ஜி பிளஸ் என அழைக்கப்படுகிறது. 5ஜி பிளஸ் சேவைகள் மேலே குறிப்பிட்டுள்ள 8 நகரங்களிலும் அதிகமான பயனர்களை சென்றடையத் தொடங்கி இருக்கிறது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகளவிலான பயனர்களுக்கு ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கத் தொடங்கி இருக்கிறது.

700Mbpsக்கும் மேல் பதிவிறக்க வேகம்

700Mbpsக்கும் மேல் பதிவிறக்க வேகம்

ஏர்டெல் 5ஜி சேவையின் வேகம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏர்டெல் 5ஜி சேவையின் வேகம் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதன்படி பயனர்கள் 700Mbpsக்கும் மேல் பதிவிறக்க வேகத்தை எட்ட முடிந்ததாக கூறப்படுகிறது. படிப்படியாக ஏர்டெல் 5ஜி சேவைக் கிடைக்கும் பகுதிகள் அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே சேவை

ஆண்ட்ராய்டு போன்களுக்கு மட்டுமே சேவை

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் ஏர்டெல் 5ஜி இணைப்பு பெற்ற பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. அதாவது கிட்டத்தட்ட பயனர்கள் இலவசமாக 5ஜி சேவையை பெற்று வருகின்றனர்.

அதுமட்டுமின்றி 5ஜி சேவையை பெற பயனர்கள் தங்களது பழைய சிம்கார்ட்களை மாற்ற வேண்டியதில்லை. 5ஜி சேவையை பெற 5ஜி ஸ்மார்ட்போன் என்பது கட்டாயம். ஆனால் தற்போது ஏர்டெல் 5ஜி ஆனது ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐபோன்களுக்கு கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Airtel 5G சேவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

Airtel 5G சேவை ஆக்டிவேட் செய்வது எப்படி?

முதலில் உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி சேவைக்கு இணக்கமானதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். உங்கள் மாடல் எண்ணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவிட்டு உங்கள் போனுக்கு 5ஜி சேவை கிடைக்கிறதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும்.

மற்றொரு வழி இருக்கிறது. பயனர்கள் உங்கள் ஆப் ஸ்டோருக்கு சென்று அதிகாரப்பூர்வ ஏர்டெல் செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் முகப்புப் பக்கத்தில் உங்கள் போன் 5ஜி இயக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளவும். இதில் காட்டப்படும் பாக்ஸ்-ஐ கிளிக் செய்த உடன் உங்கள் இருப்பிட அனுமதி கேட்கும். உங்கள் பகுதியின் 5ஜி சேவை, உங்கள் மொபைல் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து உங்கள் போன் 5ஜி இணக்கமானதா இல்லையா என்பதை ஆப் உங்களுக்கு தெரிவிக்கும்.

ஏர்டெல் Vs ஜியோ

ஏர்டெல் Vs ஜியோ

இந்தியாவில் முதல் தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. சைலண்டாக ஜியோ நான்கு நகரங்களில் மட்டும் 5ஜி சேவையை அறிமுகம் செய்தது. ஜியோவின் 5ஜி சேவையானது டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசி ஆகிய நான்கு நகரங்களில் கிடைக்கிறது. அதேபோல் ஏர்டெல் 5ஜி சேவை எட்டு நகரங்களில் கிடைக்கிறது.

அதிவேக 5ஜி இணையம் வழங்கும் நிறுவனம் எது?

அதிவேக 5ஜி இணையம் வழங்கும் நிறுவனம் எது?

ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களின் சராசரி 5ஜி பதிவிறக்க வேகத்தை வெளியான ஓக்லா அறிக்கை ஒப்பிட்டுக்காட்டுகிறது. இந்த ஒப்பீடானது இரண்டு நிறுவனங்களும் 5ஜி சேவை வழங்கும் நான்கு நகரங்களில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் வாரணாசி பகுதியில் வழங்கப்படும் ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி வேகம் ஒப்பிட்டு எது பெஸ்ட் என்ற விவரம் வெளியிடப்பட்டிருக்கிறது.

டெல்லியில், ஏர்டெல் கிட்டத்தட்ட 200 Mbps சராசரி பதிவிறக்க வேகத்தை எட்டியுள்ளது. இதன் உடன் ஒப்பிடுகையில், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதம் முதல் 600mbps சராசரி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்திருக்கிறது.

சோதனையில் வெளியான முடிவுகள்

சோதனையில் வெளியான முடிவுகள்

கொலக்கத்தாவைப் பொறுத்தவரை ஏர்டெல் 33.83mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும், ரிலையன்ஸ் ஜியோ ஜூன் மாதத்தில் 482.02mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் எட்டி இருக்கிறது. மும்பையில் ஏர்டெல் 271.07mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் ஜியோ ஜூன் முதல் 515.38mbps சராசரி பதிவிறக்க வேகத்தையும் அடைந்திருக்கிறது. இறுதியாக வாரணாசியில் பார்க்கும் போது இந்த பகுதியில் ஏர்டெல் வேகம் மேலோங்கி இருக்கிறது. வாரணாசியில் ஏர்டெல் 516.57 எம்பிபிஎஸ் 5ஜி வேகத்தையும், ஜியோ 485.22 எம்பிபிஎஸ் 5ஜி வேகத்தையும் எட்டி இருக்கிறது. ஒப்பீட்டளவில் ஜியோ பெரும்பாலான பகுதியில் அதிக மற்றும் அதீத 5ஜி வேகத்தை பதிவு செய்திருக்கிறது.

5ஜி சேவைக்கு தயாராகும் இருக்கும் இந்தியர்கள்

5ஜி சேவைக்கு தயாராகும் இருக்கும் இந்தியர்கள்

Ooklas சமீபத்தில் நுகர்வோர் கணக்கெடுப்பை நடத்தியது. அதில் சுமார் 89 சதவீத இந்திய ஸ்மார்ட்போன் பயனர்கள் 5G க்கு மேம்படுத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போதுள்ள நெட்வொர்க்கை விட 5ஜி வேகம் அதீத வகையில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Airtel Provide 5G Service without Extra Charge: How to Activate Airtel 5G in Your Phone?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X