ஏர்டெல் விலை குறைப்பு இருக்கு! ஆனால்?

Written By:

இந்திய டெலிகாம் சந்தையில் புதுவரவு நிறுவனமாகக் களம் இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோ காரணமாகச் சில சேவைகளின் விலை குறைக்கப்படலாம் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.

அதிகளவு போட்டிகள் நிறைந்த டெலிகாம் சந்தையில் சில சேவைகளின் விலையை மட்டும் குறைக்கலாம், ஆனால் இலவச வாய்ஸ் கால்களை வழங்குவது அதிகச் சிக்கல் நிறைந்த ஒன்று எனப் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் இந்திய தலைவர் கோபால் விட்டல் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
குறைப்பு

குறைப்பு

ஏர்டெல் சேவைகளின் விலை குறைப்புக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'சந்தையில் புதுவரவு நிறுவனம் பெரும்பாலும் விலை குறைந்த சேவைகளை வழங்கும் என்பதால் மற்ற நிறுவன சேவைகளின் விலைகளில் மாற்றம் கட்டாயம் இருக்கும்' என விட்டல் தெரிவித்துள்ளார்.

ஜியோ

ஜியோ

அறிமுகச் சலுகைகளை அறிவித்த ஜியோ செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை மொபைல் டேட்டா, வாய்ஸ் கால் உள்ளிட்டவற்றை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்தது. இச்சேவைகளைப் பெற டிசம்பர் 3 ஆம் தேதிக்குள் பயனர்கள் புத்தம் புதிய ஜியோ சிம் வாங்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலவச வாய்ஸ் கால்ஸ்

இலவச வாய்ஸ் கால்ஸ்

ஜியோ சேவைகளை அறிமுகம் செய்யும் போது ஜியோ சேவைகளில் அனைத்து வாய்ஸ் கால்களும் வாழ்நாள் முழுக்க இலவசமாக வழங்கப்படும் என அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார். மேலும் டேட்டா சேவைகள் மற்ற நிறுவனங்களை விடக் குறைந்த விலையில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஏர்டெல் வாய்ஸ் கால்

ஏர்டெல் வாய்ஸ் கால்

ஏர்டெல் நிறுவனம் இன்ஃபினிட்டி (ரூ.999/-) திட்டத்தின் மூலம் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்களை வழங்கி வருகின்றது. இது போன்ற இலவச சேவையினை மற்ற நிறுவனங்களால் வழங்க இயலாது என மிட்டல் தெரிவித்துள்ளார்.

பீச்சர் போன்

பீச்சர் போன்

'இன்றளவும் அதிகளவு பயனர்கள் பீச்சர் மற்றும் குறைந்த ரக ஸ்மார்ட்போன்களைப் பயபன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் சேவைகளை விதவிதமாகப் பயன்படுத்தவே விரும்புவர். டேட்டாவிற்கு ஒருவர் பணம் செலுத்தவில்லை எனில் வேறு சேவைகளில் அவர் பணத்தைச் செலுத்தலாம்,' என விட்டல் தெரிவித்துள்ளார்.

இலவச வாய்ஸ் கால்

இலவச வாய்ஸ் கால்

வாழ்நாள் முழுக்க இலவச வாய்ஸ் கால் வழங்குவது குறித்த கேள்விக்குப் பதில் அளித்த விட்டல், 'வாய்ஸ் கால் மட்டும் பயன்படுத்துவோருக்கு இது எப்படிச் சாத்தியமாக்க முடியும், சந்தையை நிலவரங்களை இரட்டிப்பாக்க அடிமட்டத்தில் இருந்து விளையாட ஏர்டெல் விரும்புகிறது.' எனத் தெரிவித்தார்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Airtel Price drop possible but not across the board free calls
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்