Airtel 2024 வெல்கம் ஆஃபர்.. இது அம்பானிக்கே எட்டாத ஐடியாவா இருக்கே!
கஸ்டமர்களை தன்வசம் ஈர்ப்பதில்.. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவிற்கே (Reliance Jio) எட்டாத ஒரு அட்டகாசமான ஐடியா, பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனத்திடம் உள்ளது. அதென்ன ஐடியா? இதன்கீழ் ஏர்டெல் பயனர்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
2024 புத்தாண்டில் நீங்கள் செய்யப்போகும் சில மாற்றங்களின் ஒரு பகுதியாக ஏற்கனவே உள்ள ப்ரீபெய்டு (Prepaid) கனெக்ஷனில் இருந்து போஸ்ட்பெய்டு (Postpaid) கனெக்ஷனிற்க்கு அப்கிரேட் ஆக திட்டமிட்டு இருந்தால்.. ஏர்டெல் வழங்கும் இந்த வெல்கம் ஆஃபர், முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

ஒரே ஒரு ஒடிபி வழியாக ஏர்டெல்-ன் ப்ரீபெய்ட் கஸ்டமராக இருக்கும் நீங்கள் போஸ்ட்பெயிட் கஸ்டமராக மாறுவது எப்படி? இப்படி செய்வதன் வழியாக உங்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? ஏர்டெல் போஸ்ட்பெயிட் சேவையின் கீழ் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கும் திட்டம் என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இதோ:
ஒரே ஒரு ஒடிபி போதும்! ஏர்டெல் பயனர்கள், ஏர்டெல் ஸ்டோர்களுக்கு செல்ல வேண்டிய அவசியமின்றி ஒடிபி வழியாக மிகவும் எளிமையான முறையில் போஸ்ட்பெயிட்டிற்கு அப்கிரேட் ஆகலாம். ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் உள்ள அப்கிரேட் டூ போஸ்ட்பெயிட் (Upgrade to Postpaid) என்கிற விருப்பத்தை கிளிக் செய்தால் போதும்.

உங்களுக்கு ஒரு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். அதை வைத்து ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்பில் கேட்கப்படும் தகவல்களை.. அதாவது முழு பெயர், இமெயில் ஐடி,ஆல்டர்நேட்டிவ் மொபைல் நம்பர், விலாசம், தேர்வு செய்ய விரும்பும் போஸ்ட்பெயிட் திட்டம் போன்ற விவரங்களை கொடுத்து, வீட்டில் இருந்தபடியே ப்ரீபெய்ட்டில் இருந்து போஸ்ட்பெயிட் வாடிக்கையாளராக மாறுவதற்கான அடிப்படை வேலைகளை செய்து முடிக்கலாம்.
ஒவ்வொரு மாதமும் ரூ.100 தள்ளுபடியும் கிடைக்கும்! ஏர்டெல் ப்ரீபெயிட்டில் இருந்து ஏர்டெல் போஸ்ட்பெயிட் சேவைக்கு அப்கிரேட் ஆகும் புதிய வாடிக்கையாளர்களுக்கு பில் டிஸ்கவுண்ட்டும் (Bill Discount) கிடைக்கும். இதன்கீழ் 1 மாதம் முதல் 6 மாதங்கள் வரையிலாக ரூ.100 தள்ளுபடி கிடைக்கும்.

ஏர்டெல்லின் என்ட்ரி-லெவல் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை என்ன? ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.399 முதல் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன. ரூ.399-ன் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (லோக்கல் + எஸ்டிடி + ரோமிங்), மாதந்தோறும் 40ஜிபி ஹைஸ்பீட் டேட்டா, 200ஜிபி வரையிலான ரோல்ஓவர் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் பலன்கள் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ஏர்டெல் தேங்க்ஸ் பலன்களின் கீழ் ஏர்டெல் ப்ளூ ரிப்பன் பேக் பிரீமியம் சர்வீஸ் ( Blue Ribbon Bag - Premium Service), எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Xstream Play Premium) சேவையின் கீழ் 20 ஓடிடி தளங்களுக்கான அணுகல், அப்பலோ சர்க்கிள் 24/7 மெம்பர்ஷிப், இலவச ஹலோ ட்யூன்ஸ் மற்றும் இலவச வின்க் ம்யூசிக் போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ஜியோ அறிவித்துள்ள 22024 நியூ இயர் ஆஃபர்: ஜியோவின் ரூ.2999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் மீது கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமான 365 நாட்கள் வேலிடிட்டி உடன் 24 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி என மொத்தம் 389 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த புத்தாண்டு சலுகை டிசம்பர் 20, 2023 முதல் அமலுக்கு வந்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.2999 திட்டத்தின் நன்மைகள்: இது தினமும் 2.5 ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா, டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 64 கேபிபிஎஸ் இண்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ்கள் போன்ற நன்மைகளை வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








