Airtel பயனர்களை குஷியடைய செய்யும் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள்! ரூ.200 விலைக்குள் இது தான் பெஸ்ட்-ஆ?
ஏர்டெல் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. என்ன தான் பல திட்டங்கள் இருந்தாலும், மக்கள் குறைந்த விலை திட்டங்களையே அதிகமாக ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள். அப்படி ரூ.200 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்களை தான் பார்க்கப்போகிறோம்.
ஏர்டெல் நிறுவனம் ரூ.200 விலைக்குள் வழங்கும் திட்டங்களை பற்றி பேசுகையில், நிறுவனம் மொத்தம் 4 திட்டங்களை வழங்குகிறது. எந்த திட்டம் என்ன மாதிரியான நன்மைகளை வழங்குகிறது என்று இப்போது பார்க்கலாம். முதலில் இருக்கும் மலிவு விலை திட்டமே இப்போது ரூ.155 விலையில் கிடைக்கிறது. முன்னதாக, ஏர்டெல்லின் குறைந்த ரீசார்ஜ் திட்டம் ரூ.99 ஆக இருந்தது. இருப்பினும், டெலிகாம் ஆபரேட்டர் பல வட்டாரங்களில் இருந்து இந்தத் திட்டத்தை ரத்து செய்துவிட்டது.

அதற்குப் பதிலாக ரூ.56 விலையை உயர்த்தி, இப்போது ரூ.155 திட்டத்தை நிறுவனம் வழங்குகிறது. எனவே இப்போது, மலிவான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும் நன்மையுடன் வருகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, 300 எஸ்எம்எஸ் மற்றும் 1 ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளில் ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் அணுகல் உடன் வருகிறது.
ஏர்டெல் ரூ.179 திட்டம், இந்த ரீசார்ஜ் திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு, 300 எஸ்எம்எஸ் மற்றும் 2ஜிபி மொத்த டேட்டாவை வழங்குகிறது. கூடுதல் பலன்கள் மேலே உள்ள திட்டங்களைப் போலவே இருக்கின்றன, அதாவது Hello Tunes மற்றும் Wynk Musicக்கான அணுகல் போன்றவை இத்துடன் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.199 திட்டம் 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் 3ஜிபி மொத்த டேட்டாவை எஸ்டிடி மற்றும் ரோமிங் நெட்வொர்க்கில் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. கூடுதல் பலன்கள், Wynk மற்றும் Hello Tunesக்கான அணுகலை வழங்குகின்றன.

இறுதியாக, ஏர்டெல் ரூ 209 திட்டம் இப்போது இந்த திட்டம் சில பயனர்களுக்கு பட்ஜெட்டை விட சற்று அதிகமாக இருக்கலாம். ஆனால் தினசரி டேட்டா பலன்கள் கொண்ட திட்டத்தை நீங்கள் விரும்பினால், இதை நீங்கள் நிச்சயமாகப் பார்க்க வேண்டும். தினசரி 1ஜிபி டேட்டாவை வழங்கும் இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 21 நாட்களுக்கு ஹலோ ட்யூன்ஸ் மற்றும் விங்க் கூடுதல் பலன்களை வழங்குகிறது.
மேலே உள்ள அனைத்து ஏர்டெல் திட்டங்களும் 5G தரவு அணுகலை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, ஏர்டெல் பயனர் ஒருவர் ஏர்டெல் 5ஜி பிளானை பயன்படுத்த விரும்பினால், நீங்கள் ரூ.239 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ் திட்டத்தை வாங்க வேண்டும். பயனர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யலாம். அங்கீகரிக்கப்பட்ட ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் பேமெண்ட் ஆபரேட்டர்கள் மூலம் ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








