தினசரி 3 ஜிபி டேட்டா: ஏர்டெல் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்!
ஏர்டெல் சிறந்த டேட்டா சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும் பட்ஜெட் விலையில் அதாவது ரூ.500-க்கு கீழ் கிடைக்கும் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்தும் பார்க்கலாம்.

பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல்
பிரபல டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகை திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து பிரபல டெலிகாம் நிறுவனங்களுக்கும் கடும் சவாலாக இருப்பது ஜியோ. இதையடுத்து ஏர்டெல் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள்
ஏர்டெல் திட்டங்கள் வெவ்வேறு வகையில் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500-க்கு கீழ் வழங்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இந்த திட்டங்களானது ரூ.349, ரூ.379, ரூ.398, ரூ.399, ரூ.499 என்ற விலையில் திட்டங்களை வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.349 ரீசார்ஜ் திட்டத்தில் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதோடு இந்த திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா சலுகையை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதோடு இந்த திட்டத்தில் அமேசான் ப்ரைம் வீடியோ, அமேசான் மியூசிக் மற்றும் ஷாப்பிங் பயன்பாட்டிற்கு இலவச வேகமான டெலிவரி ஆகியவற்றின் கீழ் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் உடன் வரம்பற்ற அழைப்புகளை பெறுகிறார்கள்.

ஏர்டெல் ரூ.379 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.379 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும் நாட்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 6 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி டேட்டா நன்மைகள் கிடைக்காது என்றாலும் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் செல்லுபடியாகும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்
இந்த திட்டம் செல்லுபடியாகும் நாட்கள் முழுவதும் வரம்பற்ற அழைப்புகளோடு 900 எஸ்எம்எஸ்கள் மொத்தமாக வழங்கப்படுகிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம், இலவச ஹெலோட்யூன்கள், ரூ.150 ஃபாஸ்ட் டேக் கேஷ்பேக் கூடுதலாக 28 நாட்கள் ஷா அகாடமியின் இலவச ஆன்லைன் வகுப்புகள் ஆகிய நன்மைகள் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.398 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல்லின் ரூ.398 ரீசார்ஜ் திட்டம் குறைந்த நாட்கள் செல்லுபடியாகும் சலுகையை வழங்கினாலும் அதிக டேட்டா நன்மையை வழங்குகிறது. இது வீடியோ ஸ்ட்ரீமிங், ஆன்லைன் கேமிங் பயன்பாடு வாடிக்கையாளர்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டாவை பெறுகிறார்கள். அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை பெறுகிறார்கள். பிற நன்மைகள் ரூ.379 திட்டம் போன்றே கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.399 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை பெறுகிறார்கள். இந்த திட்டம் வரம்பற்ற குரலழைப்பு, தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. விங்க் மியூசிக், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் ஷா அகாடமியில் இலவச ஆன்லைன் படிப்புகளுக்கு ஒரு வருடம் இலவச சந்தா மற்றும் ஃபாஸ்ட் டேக் ரூ.150 கேஷ்பேக் ஆகிய நன்மைகள் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.449 ரீசார்ஜ் திட்டம்
ஏர்டெல் ரூ.449 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா நன்மைகளை பெறுகிறார்கள். இந்த திட்டமானது மொத்தம் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் அனைத்து சலுகைகளையும் வரம்பற்ற இலவச குரல் அழைப்புகளையும் தினசரி 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளோடு வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications