Airtel போட்ட போடு.. ரூ.200 கிட்ட வந்தாச்சு.. இனி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 30 நாட்கள் வேலிடிட்டி!
ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் கண்ணை மூடிக் கொண்டு ரீசார்ஜ் செய்யும்படியான விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Prepaid Recharge Plan) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் 30 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்துக்கு செல்லலாம். இதேபோல மற்றொரு திட்டமும் ரூ.200 விலைக்குள் கிடைக்கிறது. மலிவு விலை திட்டங்களை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த செய்தி பக்கா ஆப்ஷன்களை கொடுக்கும். முழு விவரங்கள் இதோ.
ரூ.300 கூட இல்ல, ரூ.200 தான் பட்ஜெட் அதுக்குள்ள திட்டம் இருக்கனும், வாய்ஸ் கால்களுக்கு குறை இருக்க கூடாது என்றால், 30 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் ஏர்டெல் ரூ 219 திட்டம் (Airtel Rs 219 Plan) திட்டம் சரியாக இருக்கும். ஏனென்றால், ஒரு மாத கணக்கில் 30 நாட்கள் வேலிடிட்டியை இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, மாதம் முழுவதும் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.

இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) கஸ்டமர்களுக்கு செய்ய கிடைக்கிறது. டேட்டா சலுகையில் மட்டும் குறை இருக்கிறது. அதாவது, தினசரி டேட்டா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்காது. இருப்பினும், டேட்டாவே இல்லாமலும் போகவில்லை. 3 ஜிபி டேட்டா லம்ப்-சம் கணக்கில் கிடைக்கிறது.
இந்த டேட்டாவுக்கு பிறகு குறைவான வேகத்தில் கிடைக்கும் ஃபோஸ்ட் டேட்டா சலுகையும் கிடையாது. ரூ.219 விலைக்கு 30 நாட்கள் முழுவதும் வாய்ஸ் கால்கள் மற்றும் சிம் ஆக்டிவ் கொடுப்பதால், டேட்டா சலுகை குறைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் சலுகையும் அப்படித்தான் இருக்கிறது. 300 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் கணக்கில் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்பட்டு விடும்.
இந்த டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளுக்கு அடுத்ததாக ரூ.5-க்கு டாக்டைம் கொடுக்கப்படும். ஆகவே, திட்டத்தில் ரூ.5 உங்களுக்கு கிடைத்துவிடுகிறது. முன்னதாக இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சந்தா கொடுக்கப்படவில்லை. இப்போது, சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல ஸ்பேம் எஸ்எம்எஸ் மற்றும் கால்களும் அலெர்ட் செய்யப்படும்.
இந்த 2 சலுகைகளும் இப்போது கூடுதலாக கிடைக்கின்றன. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பில் பிரீமியம் வீடியோக்களை பார்க்க முடியாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இறுதியாக ஏர்டெல்லில் வழக்கமாக கிடைக்கும் விங்க் மியூசிக் (Wynk Music) மூலம் ப்ரீ ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) சலுகையும் கொடுக்கப்படுகிறது.
இதைவிடவும் கம்மியான விலையில் திட்டம் வேண்டுமானால், ஏர்டெல் ரூ 199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் இருக்கிறது. ஆனால், இந்த திட்டத்தில் ரூ.20 மட்டுமே உங்களுக்கு மிஞ்சமாக கிடைக்கிறது. இதற்கு ஏற்ப வேலிடிட்டி குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, 30 நாட்களுக்கு சலுகைகள் கிடைக்காது, 28 நாட்களுக்கு மட்டுமே வாய்ஸ் கால்கள், டேட்டாவை பெற முடியும்.
ஆகவே, இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் கால்கள், எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ளலாம். டேட்டாவும் முந்தைய திட்டத்தை போலவே லம்ப்-சம் கணக்கில் 2 ஜிபி மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால், எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் கிடையாது. 100 எஸ்எம்எஸ்கள் வீதம் நாளொன்றுக்கு அனுப்பி கொள்ள முடியும்.
இந்த திட்டத்தில் டாக்-டைம் வேல்யூ கிடையாது. அதேபோல போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது. ஆனால், முந்தைய திட்டத்தில் பார்த்த ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் சந்தாவும், விங்க் மியூசிக் மற்றும் ப்ரீ ஹலோ டியூன்ஸ் சலுகையும் வருகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் அலெர்ட் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications