Airtel பயனர்களுக்கு 84 நாள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வேண்டுமா? அப்போ இதான் பெஸ்ட்!
ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்குப் பல திட்டங்களை அவ்வப்போது வெளியிட்டுக்கொண்டு வருகிறது. அவற்றில் 84 நாட்கள் கால அவகாசம் கொண்ட திட்டங்கள் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. ஏர்டெல் நிறுவனம் 84 நாட்கள் வேலிடிட்டி கால அவகாசத்துடன் 3 வெவ்வேறு திட்டங்களை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டங்களின் நன்மைகள் என்ன என்று பார்க்கலாம்.

ஏர்டெல்லின் ட்ருலி அன்லிமிடெட்
ஏர்டெல் நிறுவனம் அதன் "ட்ருலி அன்லிமிடெட்" வகையின் கீழ், இந்த திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல், இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் முடியும் வரை, அன்லிமிடெட் கட்டணமில்லா அழைப்புகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பிடப்பட்ட திட்டங்களின் விவரங்களை இனி பார்க்கலாம்.

ரூ. 379 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட மிகவும் மலிவான திட்டமாக ரூ. 379 திட்டம் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் 6ஜிபி மாதாந்திர டேட்டா மற்றும் 900 குறுந்தகவல் கொண்ட இந்த திட்டத்தில் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி உள்ளது. அலுவலகம் மற்றும் வீடுகளில் வைஃபை வசதி கொண்டோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கூடுதல் நன்மை
இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக ஜீ5 ப்ரீமியம் சந்தா, ஏர்டெல் xஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் வின்க் மியூசிக் இலவசமாகக் கிடைக்கிறது. மேலும் உங்கள் ஸ்மார்ட் போனிற்கு ஆன்டி வைரஸ், இலவச ஹலோ ட்யூன்ஸ், ஷாவ் அகாடெமியின் 28 நாள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ரூ. 150 மதிப்புள்ள பாஸ்ட் டேக் (FASTag) பரிவர்த்தனையும் கிடைக்கும்.

ரூ. 598 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினசரி 1.5 ஜிபி டேட்டா, நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் வசதி உள்ளது. வைஃபை வசதி இல்லாதோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாடிக்கையாளர்களின் அணைத்து தேவைகளும் ஓரளவிற்கு மலிவான விலையில் கிடைப்பதால் இது அவர்களுக்கு மிகவும் பிடித்தமான திட்டமாகக் கருதப்படுகிறது.

இந்த திட்டத்தின் கூடுதல் நன்மை
இந்த திட்டத்திலும் கூடுதல் நன்மைகளாக ஜீ5 ப்ரீமியம் சந்தா, ஏர்டெல் xஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் வின்க் மியூசிக் இலவசமாகக் கிடைக்கிறது. மேலும் உங்கள் ஸ்மார்ட் போனிற்கு ஆன்டி வைரஸ், இலவச ஹலோ ட்யூன்ஸ், ஷாவ் அகாடெமியின் 28 நாள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ரூ. 150 மதிப்புள்ள பாஸ்ட் டேக் (FASTag) பரிவர்த்தனையும் கிடைக்கிறது.

ரூ. 698 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல்லில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களில் மிகவும் விலை உயந்த திட்டமான ரூ. 698 என்ற இந்த திட்டத்தின் கீழ், தினசரி 2 ஜிபி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் கால் வசதி உள்ளது. வைஃபை வசதி இல்லாதோருக்கும் அதிவேக இன்டர்நெட் வசதியை விரும்புவோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தினமும் நள்ளிரவு 12 மணிக்குப் புதுப்பிக்கப்படும்
தினசரி டேட்டா மற்றும் குறுந்தகவல் வரம்புகள் தினமும் நள்ளிரவு 12 மணிக்குப் புதுப்பிக்கப்படும்.இந்த திட்டத்திலும் கூடுதல் நன்மைகளாக ஜீ5 ப்ரீமியம் சந்தா, ஏர்டெல் xஸ்ட்ரீம் ப்ரீமியம் மற்றும் வின்க் மியூசிக் இலவசமாக கிடைக்கிறது. மேலும் உங்கள் ஸ்மார்ட் போனிற்கு ஆன்டி வைரஸ், இலவச ஹலோ ட்யூன்ஸ், ஷாவ் அகாடெமியின் 28 நாள் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் ரூ. 150 மதிப்புள்ள கேஷ் பாக் பாஸ்ட் டேக் (FASTag) பரிவர்த்தனையும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








