முழுசா 1 வருஷம் OTT.. தினமும் 3ஜிபி டேட்டா.. மூன்று திட்டங்களில் அள்ளி வழங்கும் Airtel.. விட்றாதீங்க..
ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி தரும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதாவது சாதாரண ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வதை விட ஓடிடி தளங்களில் ரீசார்ஜ் செய்ய வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதுவும் ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை பட்ஜெட் விலையில் வழங்கி வருகிறது. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் அதன் நன்மைகளை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 549 Prepaid plan) ஆனது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே(Airtel Xstream Play) சந்தாவும் இதில் கிடைக்கும். குறிப்பாக ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆனது 22-க்கு மேற்பட்ட ஓடிடி தளங்களை வழங்குகிறது.
ஏர்டெல் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் உள்ளது.
தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 1029 Prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டமும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle)உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.

இந்த ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 Prepaid plan) ஆனது 1 வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. மேலும் அலிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இதில் கிடைக்கும். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
குறிப்பாக ஏர்டெல் ரூ.3999 திட்டம் ஆனது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications