அசத்தும் ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல 1 மாதம் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா, ஜியோ, பிஎஸ்என்எல் நிறுவனங்களை விட கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம்.
எனவே தான் ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் ஒரு மாதம் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த ப்ரீபெயட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ 296 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 296 Recharge Plan) மொத்தம் 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்குத் தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். அதேபோல் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 319 Recharge Plan) ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் உள்ளது. அன்லிமிடெட் 5ஜி, அப்5பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற அசத்தலான சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 359 Recharge Plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 1 மாதம் வேலிட்டி வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் உள்ளது. மேலும் அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது இந்த ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 489 Recharge Plan) மொத்தமாக 50ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.. பின்பு இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். குறிப்பாக ஏர்டெல் ரூ.489 ப்ரீபெய்ட திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற நன்மைகள் வழங்கும் இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.509 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 509 Recharge Plan) ஒரு மாதம் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி, அப்பல்லோ 24|7 சர்கிள் (Apollo 24|7 Circle) சலுகை, ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் போன்ற அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் கூடிய விரைவில் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதே நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.


Click it and Unblock the Notifications








