அள்ளிக் கொடுக்கும் ஏர்டெல்.. தினமும் 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. என்ன விலை? வேலிடிட்டி?
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். அதேபோல் ஜியோவை விட சில ப்ரீபேய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை வழங்குகிறது ஏர்டெல். எனவே தான் ஏர்டெல் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்குத் தகுந்தபடி அவ்வப்போது புதிய புதிய திட்டங்களைக் கொண்டுவருகிறது ஏர்டெல் நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு மாதம் வேலிடிட்டி தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது ஏர்டெல் (Airtel) நிறுவனத்தின் ரூ.319 மற்றும் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டங்கள் தான் தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. இப்போது இந்த திட்டங்களை நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையைத் தரும். வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
ஜியோ நிறுவனம் கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அதாவது ஜியோ ரூ.299 மற்றும் ரூ.388 விலைகளில் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. ஆனால் வேலிடிட்டி தான் குறைவாக உள்ளது. இப்போது ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.
ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.388 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். இதுதவிர 3 மாத டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








