இனி தனியாக Netflix-க்கு செலவு வேண்டாம்.. இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் போதும்.. பட்டியல் இதோ..
தற்போது ஏர்டெல் (Airtel) ப்ரீபெய்ட் பயனர்கள் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதுவும் மற்ற நிறுவனங்களை விட கம்மி பட்ஜெட்டில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா தரும் திட்டங்களை வைத்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது நெட்பிளிக்ஸ் சந்தா தரும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 279 Prepaid Plan) நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super), ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) போன்றவற்றின் சந்தாவை வழங்குகிறது.

அதேபோல் ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 30ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடையாது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) திட்டத்தில் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் போன்ற ஓடிடி சந்தாக்கள் கிடைக்கிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு 28 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.
தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் அதிக OTT சந்தா கிடைக்கும்.
குறிப்பாக பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட தரமான ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications