இனி Netflix-க்கு இந்த 2 திட்டங்கள் போதும்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. எஸ்எம்எஸ்.. விட்றாதீங்க!
ஏர்டெல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன்பு மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கியது. ஆனாலும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் இன்னும் அதிக சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. அவ்வப்போது இந்நிறுவனம் ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளும் வழங்கி வருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா உடன் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1729 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் அதிக OTT சந்தா கிடைக்கும்.
பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் (zee5 premium) மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (airtel xstream play) பிரீமியம் உள்ளிட்ட தரமான ஓடிடி சந்தா வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1729 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக ரூ.4000 மதிப்புள்ள adobe எக்ஸ்பிரஸ் பிரீமியம் (adobe express premium), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) போன்ற சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம்.
குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் அதிக ஓடிடி நன்மைகள், 84 நாட்கள் டேட்டா, அதிக டேட்டா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகின்றன. எனவே இந்த இரண்டு திட்டங்களில் ஒரு திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் கூட மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications
