Home
News

ரூ.400 - ரூ.1000 பட்ஜெட்டில்.. இலவச Netflix, Amazon Prime, JioHotstar சந்தாவை வழங்கும் Airtel திட்டங்கள்!

பாரதி ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஆனது அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு பல அற்புதமான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஆனால் உங்களுடைய தேவை - வரம்பற்ற வாய்ஸ் காலிங், டேட்டா மற்றும் மெசேஜிங் போன்ற வழக்கமான நன்மைகளுடன் சேர்த்து இலவச ஓடிடி (OTT) நன்மையும் வேண்டுமா?

ஆம் என்றால் கவலையை விடுங்கள், நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவையின் கீழ் ரூ.400 - ரூ.1000 க்குள் என்கிற பட்ஜெட்டில் இலவச நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் லைட் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகிய சந்தாவை (தனித்தனியாக) வழங்கும் ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியல் இதோ:

இலவச Netflix, Amazon Prime, JioHotstar சந்தாவை வழங்கும் Airtel!

ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.398 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ஆனது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா ஆகிய நன்மைகளை 30 நாட்கள் என்கிற செல்லுபடியாகும் காலத்திற்கு வழங்குகிறது.

ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.449 ரீசார்ஜ் திட்டம் ஆனது வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி மற்றும் ரோமிங் அழைப்புகளுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் வழியாக 22 க்கும் மேற்பட்ட ஓடிடி சேவைக்ளுக்கான அணுகல்களை வழங்குகிறது.

ரூ.449 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் சந்தாதாரர்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியத்திற்கான (Airtel Xstream Play Premium) முழு அணுகலை பெறுகிறார்கள். இதன்கீழ் சோனி எல்ஐவி, லயன்ஸ்கேட் ப்ளே, ஆஹா, ஹோய்சோய், சௌபால் மற்றும் சன்என்எக்ஸ்ட் உள்ளிட்ட 22 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை 28 நாட்களுக்கு இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யலாம்.

மேலும் மிகவும் சமீபத்தில் - இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் மிகவும் எதிர்பாராத இலவசம் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. அது ரூ.17,000 மதிப்புள்ள பிரீமியம் ஏஐ சேர்ச் அசிஸ்டன்ட் ஆன பேரபிளெக்ஸ்சிட்டி ப்ரோ ஏஐ-க்கான (Perplexity Pro AI) ஒரு வருட இலவச சந்தாவாகும். இந்த சேர்க்கை பயனர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கூடுதல் செலவு இல்லாமல் மேம்பட்ட ஏஐ டூல்களை (Advanced AI Tools) அணுக உதவுகிறது.

மேலும் நீங்கள் 5ஜி கவரேஜ் கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், இந்த பேக்கின் கீழ் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பை தாண்டி வரம்பற்ற 5ஜி டேட்டா நன்மையையும் (Unlimited 5G Data Benefit) பெறுவீர்கள். ஸ்ட்ரீமிங், கேமிங் அல்லது வேலை தொடர்பான பயன்பாட்டிற்கு அதிவேக இண்டர்நெட் தேவைப்படும் பயனர்களுக்கு இது ஒரு முக்கியமான நன்மையாகும்.

ஏர்டெல் ரூ.598 ரீசார்ஜ் திட்டம்: நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் வரும் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இது உங்களுக்கானது தான். ரூ.598 ரீசார்ஜ் திட்டம் ஜியோஹாட்ஸ்டார் உடன் நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவிற்கான அணுகல், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலிங்கை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்: ரூ.838 ரீசார்ஜ் திட்டம் அமேசான் பிரைம் லைட் சந்தாவுடன் வருகிறது. இது 56 நாள் செல்லுபடியாகும். இதன் கீழ் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா நன்மை, இலவச எஸ்எம்எஸ்கள் மற்றும் வரம்பற்ற வாய்ஸ் காலிங் நன்மையும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.979 ரீசார்ஜ் திட்டம்: ஓடிடி நன்மைகளுடன் வரும் நீண்ட கால ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், ஏர்டெல் ரூ.979 ரீசார்ஜ் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கலாம். இது 84 நாட்கள் செல்லுபடியாகும். இதன்கீழ் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே பிரீமியம் வழியாக 22 க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை அணுகலாம், அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Prepaid Plans With Free OTT Netflix Amazon Prime JioHotstar Under Rs 400 Rs 600 Rs 1000
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X