டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வேணுமா? இனி Airtel பயனர்கள் இவ்வளவு செலவு பண்ணனும்.. நோட் பண்ணுங்க..
ஏர்டெல் (airtel) நிறுவனம் சமீபத்தில் விலை உயர்வை அறிவித்தது. அதுவும் முக்கியமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களும் உயர்த்தப்பட்டதால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அதாவது முன்பு ரூ.499, ரூ.869 ப்ரீபெய்ட் திட்டங்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கி வந்தன. தற்போது இந்த திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. சரி இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கும் ஏர்டெல்லின் புதிய திட்டங்களைப் பார்ப்போம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 549 plan Details) ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா கிடைக்கும். குறிப்பாகத் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 1029 plan Details ) தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக ஏர்டெல் ரூ.1029 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடம் அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.365 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (disney + Hotstar) சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த அசத்தலான திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றன. இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் உள்ளது.

அதன்படி ஏர்டெல் ரூ.3999 திட்டம் ஆனது அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), விங்க் மியூசிக் (Wynk Music),அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பதை நினைவில் கொள்க.
அதேபோல் ஜியோ நிறுவனமும் முக்கியமான ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளது. குறிப்பாக தனியார் டெலிகாம் நிறுவனங்கள் விலை உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு மக்கள் தற்போது பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்கத் தொடங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








