அள்ளி தந்த ஏர்டெல்.. கம்மி பட்ஜெட்ல 84 நாள் வேலிடிட்டி.. ஓடிடி.. அன்லிமிடெட் சலுகைகள்.. எந்த திட்டம்?
ஜியோ நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது ஏர்டெல். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் மூன்று மாதங்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைப் பயனர்கள் அதிகம் தேர்வு செய்கின்றர். குறிப்பாக இந்த மூன்று மாத வேலிடிட்டி வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் எக்கச்சக்க சலுகைகளை வழங்குகின்ற என்றே கூறலாம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 999 plan) ஆனது தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தம் 210 டேட்டா கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதாவது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி தளங்களின் இலவச சந்தா கொடுக்கிறது ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாகஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே கீழ் சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே உள்ளிட்ட 15 ஓடிடி தளங்களில் இலவச சந்தா வழங்கப்படுகிறது.
இதுதவிர அமேசான் பிரைம் சந்தா, RewardsMini சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல சிறப்பான சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் (airtel rs 869 plan) திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. பின்பு இந்த புதிய திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் (airtel rs 839 plan) திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே சந்தா வழங்கப்படுகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.719 ப்ரீபெய்ட் (airtel rs 719 plan) திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








