Home
News

இனி ரூ.509 முதல்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. இதோ Airtel லிஸ்ட்..

ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதுவும் மக்கள் அதிகம் ரீசார்ஜ் செய்யும் 84 நாள் வேலிடிட்டி தரும் திட்டங்களின் விலையும் உயர்த்தப்பட்டதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். தற்போது கிடைக்கும் 84 நாள் வேலிடிட்டி கொண்ட ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ 509 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 509 plan Details) ஆனது மொத்தம் 6ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் உள்ளிட்ட நன்மைகளும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ 509 திட்டம்.

இனி ரூ.509 முதல்.. 84 நாட்கள் வேலிடிட்டி..  இதோ ஏர்டெல் லிஸ்ட்..

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid recharge plan) நாள் ஒன்றுக்கு 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். இதுதவிர பல்வேறு சலுகைகள் இதில் கிடைக்கிறது

அதன்படி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் போன்ற பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பான இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி ரூ.509 முதல்.. 84 நாட்கள் வேலிடிட்டி..  இதோ ஏர்டெல் லிஸ்ட்..

ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ 1029 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1029 plan Details) ஆனது நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். மேலும் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் உள்ளிட்ட நன்மைகளும் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ 1029 திட்டம்.

இனி ரூ.509 முதல்.. 84 நாட்கள் வேலிடிட்டி..  இதோ ஏர்டெல் லிஸ்ட்..

ஏர்டெல் ரூ 1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 plan Details) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த ஏர்டெல் ரூ.1029 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Prepaid Plans with 84 Days Validity: Here is the list
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X