Airtel-க்கு கும்பிடு.. கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டியாக அவ்வப்போது சலுகைகள் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் (airtel). அதுவும் ஏர்டெல் நிறுவனம் கடந்த சில மாதங்களில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. குறிப்பாக ஓடிடி நன்மைகளுடன் அதிக டேட்டா தருகிறது. எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது கம்மி பட்ஜெட்டில் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் அதிக பலன்களைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ரூ.838 திட்டம். இந்த பிரைம் சந்தா மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதுவும் ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 579 prepaid plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். நீங்கள் ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.


Click it and Unblock the Notifications








