யாரு விடுவா? தினமும் 3ஜிபி டேட்டா.. 56 நாட்கள் வேலிடிட்டி.. பட்ஜெட் விலை.. அள்ளி கொடுக்கும் Airtel..
ஜியோவுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் ஒரு மாத வேலிடிட்டி தரும் திட்டங்களை விட கூடுதல் வேலிடிட்டி தரும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அதுவும் இந்நிறுவனத்தின் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் திட்டங்களை வைத்துள்ள ஏர்டெல் நிறுவனம். இப்போது பட்ஜெட் விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (airtel rs 838 plan) ஆனது தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. குறிப்பாக 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த திட்டம்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட இதில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை கவனத்தில் கொள்க.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட சலுகைகள் இதில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம்(airtel rs 579 plan) தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), விங்க் மியூசிக் (Wynk Music), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.


Click it and Unblock the Notifications








