2025 புத்தாண்டு.. 56 நாட்கள் வேலிடிட்டி.. தினமும் 3ஜிபி டேட்டா.. அள்ளி தரும் 3 Airtel திட்டங்கள்..
ஏர்டெல் நிறுவனம் சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. எனவே தான் ஜியோவை விட ஏர்டெல் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். 2025-ல் 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகள் வழங்கும் ஏர்டெல் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 838 plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள்(apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படும்.
ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 649 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.649 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகள் இதில் உள்ளன.
ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 579 plan) ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பதை நினைவில் கொள்க.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.579 ப்ரீபெய்ட் திட்டம். தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.


Click it and Unblock the Notifications








