ஏர்டெல் ரீசார்ஜ் பண்ண போறீங்களா? வெறும் ரூ.1849 முதல்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்..
ஏர்டெல் (airtel) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். அதேபோல் இந்நிறுவனம் 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் பிளான் (airtel rs 1849 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது.

குறிப்பாக இந்த ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் மொத்தம் 3600 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் பிளான் (airtel rs 2249 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
மேலும் ஏர்டெல் ரூ 2249 ப்ரீபெய்ட் பிளான் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர 3600 எஸ்எம்எஸ், ஹலோ டியூன்ஸ் (Hello Tunes) உள்ளிட்ட நன்மைகளும் இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் பிளான் (Airtel Rs 3599 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டா வழங்கும். மேலும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே இந்த ஏர்டெல் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும்.

ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் பிளான் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக நீங்கள் ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த ஏர்டெல் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.


Click it and Unblock the Notifications