தினமும் 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. பட்ஜெட் விலை... அசத்தும் ஏர்டெல் திட்டங்கள்..
ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாகத் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது ஏர்டெல் நிறுவனம்.
அதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்து நகரங்களிலும் ஏர்டெல் தனது 5ஜி சேவையைக் கொண்டுவந்துவிட்டது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் தினமும் 2ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.319ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். இதுதவிர ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும்.
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட சில நன்மைகள் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதிக சலுகைகளை இந்த திட்டம் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் ஏர்டெல் ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.2999ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு வருடம் (365 நாட்கள்) மாதம் ஆகும்.
அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக இந்நிறுவனம் கொண்டுவரும் இந்நிறுவனம். அதேசமயம் ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும்
என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








