தூள் கிளப்பும் ஏர்டெல்.. ரூ.300 போதும்.. தினசரி 1.5ஜிபி டேட்டா.. ஓடிடி.. அன்லிமிடெட் சலுகைகள்.. இதோ பட்டியல்.!
ஜியோ நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கு வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் கொடுக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
அதேபோல் இந்நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.300-க்கு கீழ் அதிக சலுகைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தமாக 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் இதில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்தி பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும். இதுதவிர விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) அன்லிமிடெட் 5ஜி உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்;டம்.
ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் 21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மை மட்டும் வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மை மட்டும் வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், 300 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் 15ஜிபி டேட்டாவை மொத்தமாக வழங்கும். ஆனால் இந்த திட்டத்தில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படாது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷன் இதில் கொடுக்கப்படுகிறது. இதன் கீழ் மொத்தம் 12 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த வகையில், சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) உள்ளிட்டவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








