Home
News

அட இது தெரியாம போச்சே.. ரூ.250 விலைக்குள் இத்தனை ரீசார்ஜ் திட்டங்களா? எது சூப்பர் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டம்?

ஜியோவுடன் (Jio) நடக்கும் வியாபார போட்டியை சரி செய்ய ஏர்டெல் (Airtel) நிறுவனம் பல புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அப்படி மக்களுக்கான மிகவும் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டங்களின் தொகுப்பை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.

இந்தியாவில் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களுக்கு தான் அதிக வரவேற்பு கிடைக்கிறது. இதை உணர்ந்த ஏர்டெல் நிறுவனம், ஜியோவுக்கு போட்டியாக ரூ.300 விலைக்குள் கிடைக்கும் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. இதில் பல அட்டகாசமான திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. எந்த திட்டம் சூப்பர் பெஸ்ட் நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாமா?

அட இது தெரியாம போச்சே.. ரூ.250 விலைக்குள் இத்தனை ரீசார்ஜ் திட்டங்களா?

1. ஏர்டெல் ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 148 Prepaid Plan):
இந்த திட்டம் 15ஜிபி டேட்டாவை மொத்தமாக வழங்குகிறது. ஆனால் இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது. இதுவொரு டேட்டா பேக் திட்டமாகும். இருப்பினும் இதில் ஒரு சூப்பர் பெஸ்ட் நன்மை கிடைக்கிறது. இத்திட்டத்துடன், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) சந்தா இலவசமாக கிடைக்கிறது.

இது 15+ வகையான ஓடிடி தளங்களின் சப்ஸ்கிரிப்ஷனை ஒரே இடத்தில் வழங்குகிறது. இதன் கீழ், சோனிலிவ் (SonyLiv), லையன்ஸ்கேட்பிளே (LionsgatePlay), ஈராஸ்நவ் (ErosNow), மனோரமா மேக்ஸ் (ManoramaMAX), ஷீமரூமி (Shemaroome), நம்மபிளிக்ஸ் (Nammaflix) டிவோ (Divo), அல்ட்ரா (Ultra), க்ளிக் (Klikk) மற்றும் ஹங்கமா பிளே (HungamaPlay) போன்ற OTT தளங்களின் உள்ளடக்கங்களை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

2. ஏர்டெல் ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 155 Prepaid Plan):
இந்த திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இது மொத்தமாக 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மை கிடைக்கிறது. இதில் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளாக விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட பல நன்மைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

அட இது தெரியாம போச்சே.. ரூ.250 விலைக்குள் இத்தனை ரீசார்ஜ் திட்டங்களா?

3. ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 199 Prepaid Plan):
இந்த திட்டம் மொத்தமாக 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இதுவும் மேற்கூறிய திட்டத்தை போல, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை 30 நாட்களுக்கு வழங்குகிறது. இத்துடன், கூடுதல் இலவச நன்மைகளாக விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) போன்றவற்றை நிறுவனம் வழங்குகிறது.

4. ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 209 Prepaid Plan):
21 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

5. ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 239 Prepaid Plan):
இந்த் திட்டம் தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் நீங்கள் தினசரி டேட்டாவை பயன்படுத்திய பின்னர் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும். இத்துடன் கூடுதல் இலவச நன்மைகளாக, விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) போன்றவற்றை நிறுவனம் வழங்குகிறது.

இறுதியில், ரூ.148 டேட்டா திட்டம் மிகவும் சிறந்த நன்மைகளை வழங்குவதாக கருதப்படுகிறது. காரணம், இது 15+ OTT தளங்களுக்கான அணுகலை வழங்குகிறது. அடிப்படை திட்டமாக குறைந்த விலை திட்டங்களை தேர்வு செய்துவிட்டு, இந்த டேட்டா பேக் திட்டத்தை தெரிவ்ய் செய்தால், சிறப்பான அனுபவத்தை அனுபவிக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Prepaid Plans Under Rs 250 To Recharge Now In India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X