Home
News

ஏர்டெல் சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்ல 84 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் சலுகைகள்..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் இப்போதும் கம்மி பட்ஜெட்டில் அதிக நன்மைகளை தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் பலர் இந்நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ரூ.1000-க்கு கீழ் 84 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே இந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 979 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. 84 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி பெற முடியும். பின்பு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (airtel xstream play) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும் என்பதைக் கவனத்தில் கொள்க.

ஏர்டெல் சிம் கார்டு யூஸ் பண்றீங்களா?  84 நாட்கள் வேலிடிட்டி..

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)
வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.979 ப்ரீபெய்ட் திட்டம் மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 859 prepaid plan) தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 126ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்குகிறது ஏர்டெல் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டம் இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ்,ரிவார்ட்ஸ்மினி சந்தா (Rewards Mini Subscription), அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 548 prepaid plan) மொத்தமாக 7ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் 900 எஸ்எம்எஸ், 84 நாட்கள் வேலிடிட்டி, அப்பல்லோ 24/7 சர்க்கிள் மெம்பர்ஷிப், ப்ரீ ஹாலோ டியூன்ஸ் போன்ற நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.

ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 469 prepaid plan) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்குகிறது இந்த திட்டம். மேலும் 900 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை விரும்பும் பயனர்கள் ஏர்டெல் ரூ.979 மற்றும் ரூ.859 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது நல்லது. அதேபோல் அழைப்பு நன்மைகளை மட்டும் விரும்பும் பயனர்கள் ரூ.548 மற்றும் ரூ.469 ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans under Rs.1000 with 84 days validity: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X