முழுசா ஒரு மாசம்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. வாரி வழங்கும் Airtel.. என்ன விலை?
ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக அவ்வப்போது புதிய சலுகைகள் மற்றும் புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் கொண்டு வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் ஜியோவை விட கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் அதிக மக்கள் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனத்தின் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்கின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். ஏர்டெல் நிறுவனம் ஒரு மாதம் வேலிடிட்டி தரும் மூன்று அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளன. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் அதில் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 379 plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 62ஜிபி வரை டேட்டா கிடைக்கும். இதுதவிர பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.379 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் திட்டம் வழங்குகிறது.
ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 429 plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.429 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 77.5ஜிபி வரை டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ609 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 609 plan) மொத்தமாக ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். எனவே இந்த 60ஜிபி டேட்டாவை எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். இதுதவிர பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ஏர்டெல் ரூ609 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் 300 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.
குறிப்பாக ஏர்டெல் பயனர்கள் 28 நாட்கள் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வதை விட 1 மாதம் முழு வேலிடிட்டி தரும் இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








