Home
News

தூள் கிளப்பும் Airtel.. நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, தினமும் 3ஜிபி டேட்டா.. இந்த 3 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஏர்டெல் (Airtel) நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. அதாவது சமீபத்தில் இந்நிறுவனம் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI) ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் (எஸ்எம்எஸ்) ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும் என்று கூறப்படுகிறது.

ஏர்டெல் கொண்டுவந்துள்ள இந்த புதிய வசதியானது இலவசமாக அனைத்து ஏர்டெல் பயனர்களுக்கும் சேவை கோரிக்கையை எழுப்பாமலேயே அல்லது செயலியைப் பதிவிறக்கம் செய்யாமலே தானாகச் செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

தூள் கிளப்பும் Airtel.. இந்த 3 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (airtel rs 838 prepaid plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்குகிறது இந்த திட்டம்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (airtel rs 1199 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்கும். அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.1199 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் திட்டம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1199 திட்டம். அதன்பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), rewards mini subscription, விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

தூள் கிளப்பும் Airtel.. இந்த 3 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட்திட்டம் (airtel rs 1798 prepaid plan) ஆனது பேஸிக் நெட்பிளிக்ஸ் (netflix basic) சந்தா வழங்குகிறது. மேலும் தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டத்தில்
கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans that offer Netflix and Amazon Prime subscription at budget prices: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X