அள்ளிக்கொட்டிய Airtel.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்.. இலவசமாக ஹாட்ஸ்டார், நெட்பிளிக்ஸ் சந்தா..
இந்தியாவில் ஐபிஎல் 2024 போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளதால் ஏர்டெல் நிறுவனம் அற்புதமான ஓடிடி தரும் திட்டங்களை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கும்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் ((airtel rs 869 plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் RewardsMini சந்தா, அப்பல்லோ 24/7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ், விங்க் மியூசிக், அன்லிமிடெட் 5ஜி டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1499 plan) ஆனது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ரூ.1499 ப்ரீபெய்ட திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 252ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்ட்
குறிப்பாக ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக நெட்பிளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது. பின்பு ப்ரீ ஹாலோடியூன்ஸ்,விங்க் மியூசிக் (Wynk Music) சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் அப்பல்லோ 24/7 சர்கிள் போன்ற சலுகைகள் கூட இந்த ஏர்டெல் திட்டம் வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் ஏர்டெல் இரண்டு சமீபத்தில் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது. அந்த ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.129 திட்டம் (airtel rs 129 plan)ஆனது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் 12ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் ரூ.129 திட்டம் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்காதது. அதேபோல் இந்த திட்டத்திற்கென பிரத்யேக வேலிடிட்டி எதுவும் இல்லை. இது உங்களுடைய பேஸிக் ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி (Basic Prepaid Plan Validity) உடன் ஒற்றுப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.329 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 329 plan) ஆனது மொத்தம் 4ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 35 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 300 இலவச எஸ்எம்எஸ்கள், அப்பல்லோ 24/7 சர்க்கிள் சந்தா (Apollo 24|7 Circle subscription), இலவச ஹலோ ட்யூன்ஸ் (Hellotunes) மற்றும் விங்க் மியூசிக் (Wynk Music) உள்ளிட்ட ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் (Airtel Thanks Benefits) வழங்கும்.


Click it and Unblock the Notifications








