ஒரே ரீசார்ஜ் ஒரு வருடம் கவலை இல்லை.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்.. அள்ளி கொடுக்கும் Airtel..
ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு வருட வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஒரு வருடம் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏர்டெல் திட்டம் 1 வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த OTT நன்மை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3999 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா(unlimited 5g data), தினமும் 100 எஸ்எம்எஸ் போன்ற சலுகைகளை இந்த திட்டம் மூலம் பெற முடியும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம்(Airtel Rs 3599 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 2249 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 2249 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மையை இந்த திட்டம் மூலம் பெற முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் மொத்தமாக 30ஜிபி டேட்டா, 3600 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 1849 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1849 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) நன்மை இந்த திட்டத்தில் உள்ளது. மேலும் 3600 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோடியூன்ஸ், பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








