இது ஏர்டெல் ஸ்கெட்ச்.. ரூ.500 போதும்.. OTT, தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் சலுகைகள்.. அசத்தும் திட்டங்கள்..
ஜியோ, வோடபோன் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்து வருவோம். அதாவது ரூ.500-க்கு கீழ் அதிக டேட்டா மற்றும் ஓடிடி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இப்போது அந்த திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெயட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெயட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஏர்டெல் ரூ.499 ப்ரீபெயட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஓடிடி தளத்தின் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கும். மேலும ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் ஓடிடி சந்தா, ப்ரீ ஹாலோ டியூன்ஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ.479 ப்ரீபெயட் திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். மேலும் ப்ரீ ஹாலோ டியூன்ஸ்,விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளேவின் கீழ் 20 ஓடிடி ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ப்ரீ ஹாலோ டியூன்ஸ், விங்க் மியூசிக், அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்குகிறது ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் வழங்கும் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.359 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டமும் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100எஸ்எம்எஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் தினமும் 1.5ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுதவிர அப்பல்லோ 24/7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகள் இதில் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








