Home
News

அசரவைக்கும் Airtel.. அமேசான் பிரைம்.. ஹாட்ஸ்டார்.. தினமும் 3ஜிபி டேட்டா.. இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க..

ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவின் முதல் நெட்வொர்க் அடிப்படையிலான ஏஐ (AI)ஆற்றல் பெற்ற ஸ்பேம் கண்டறிதல் தீர்வை அறிமுகம் செய்தது. குறிப்பாக இது ஏர்டெல் பயனர்களுக்கு ஸ்பேம் அழைப்புகள் மற்றும் செய்திகளால் (எஸ்எம்எஸ்) ஏற்படும் சிக்கலைக் கணிசமான அளவில் தீர்க்கும்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் பட்ஜெட் விலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் அமேசான் பிரைம் சந்தா தரும் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த பட்ஜெட் விலை திட்டங்களின் நன்மைகள் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

அசரவைக்கும் Airtel.. அமேசான் பிரைம், இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 549 Prepaid plan) மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. மேலும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இதில் கிடைக்கும். அதுவும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே ஆனது 22-க்கும் மேற்பட்ட ஓடிடி தளங்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஏர்டெல் ரூ 549 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle), உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 838 plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை உள்ளது. மேலும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.

குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைகிறது என்பதைக் கவனத்தில் கொள்க. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans offering prime video, hotstar subscription: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X