ரூ.1000-க்கு கீழ் அள்ளி கொடுக்கும் Airtel.. தினமும் 3ஜிபி டேட்டா.. 56 நாள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். அதேபோல் இந்நிறுவனம் ரூ.1000-க்கு கீழ் தினமும் 3ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ரூ.838 திட்டம்.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play சந்தாவும் ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதன் கீழ் 22 OTT ஆப்களை பயன்படுத்த முடியும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும்.
ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 549 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ரூ.549 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)
சலுகை ஏர்டெல் ரூ.549 ப்ரீபெய்ட்திட்டத்தில் கிடைக்கும். தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளை இந்த திட்டம் மூலம் பெறமுடியும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கும். 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.
இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








