Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? அமேசான் பிரைம்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. விட்றாதீங்க..
ஏர்டெல் (airtel) நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் ஓடிடி சந்தாவுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்வதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) சந்தா தரும் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1199 prepaid plan) ஆனது மொத்தம் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே இந்த திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 210ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
அதேபோல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே போன்ற 20-க்கும் மேற்பட்ட ஓடிடி சந்தா கிடைக்கிறது. குறிப்பாக இது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.1199 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், rewards mini subscription, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
56 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் சந்தா (amazon prime lite subscription) சந்தா வழங்கும் ரூ.838 திட்டம். ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 20-க்கும் மேற்பட்ட ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இதில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








