Airtel சிம் கார்டு யூஸ் பண்றீங்களா? கம்மி பட்ஜெட்டில் நெட்பிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன்.. அன்லிமிடெட் சலுகைகள்..
ஏர்டெல் நிறுவனம் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. குறிப்பாக ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்ய தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எனவே தான் சமீபத்தில் பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஓடிடி திட்டங்களை அறிமுகம் செய்தது ஏர்டெல் நிறுவனம்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். கம்மி பட்ஜெட்டில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். இந்த பதிவில் அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும்.
மேலும்பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. பின்பு பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதன்படி அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளன.
ஏர்டெல் நிறுவனத்தின் ஆனது ரூ.271 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 271 Prepaid Plan) ஆனது மொத்தம் 1ஜிபி டேட்டா மட்டுமே வழங்குகிறது. மேலும் ஒரு மாதம் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட அசத்தலான ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் திட்டம். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அதிக டேட்டா நன்மையுடன் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டும் என நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.1798 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

அதாவது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 1798 prepaid plan) தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 252ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வழங்குகிறது இந்த ஏர்டெல் திட்டம்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஏர்டெல் ரூ.1798 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.
photo credit: commons.wikimedia.org


Click it and Unblock the Notifications