Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? குறைந்த விலையில் OTT.. டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. யாரு விடுவா?
ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது பட்ஜெட் விலையில் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் (airtel). குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் கம்மி பட்ஜெட்டில் ஓடிடி (OTT) மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 398 Prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. எனவே நீங்கள் ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைஇந்த திட்டத்தில் உள்ளது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes) உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel rs 449 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டா வழங்கும். மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே நீங்கள் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த திட்டம்.
அதேபோல் ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா வழங்கப்படுகிறது. குறிப்பாக இதன் மூலம் சோனிலிவ் (SonyLIV), மனோரமா மேக்ஸ் (Manorama Max), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) போன்ற 22 ஓடிடி ஆப்களை பயன்படுத்த முடியும் .
மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட அசத்தலான ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








