ஒரே ஏர்டெல் ரீசார்ஜ்.. ஒரு வருடத்திற்கு OTT.. 365 நாள் வேலிடிட்டி.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ (jio), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஏர்டெல் (airtel) நிறுவனம். மேலும் ஏர்டெல் நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சில கூடுதல் சலுகைகளும் வழங்குகிறது. எனவே தான் ஏர்டெல் திட்டங்களில் ரிசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் OTT மற்றும் அதிக டேட்டா நன்மைகளைத் தரும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல். இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Airtel Rs 3599 prepaid plan) 365 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls)
சலுகை ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த ஏர்டெல் திட்டத்தில் வழங்கப்படுகிறது.
அதன்படி தினமும் 100 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் கிடைக்கும். மேலும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 3999 prepaid plan) ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா கிடைக்கும். எனவே ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் மொத்தமாக 912.5ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5 டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக ஏர்டெல் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கும் என்பதைக் கவனத்தில் கொள்க. பின்பு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஏர்டெல் ரூ.3599 திட்டத்தில் வழங்கப்படுகிறது.
தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.3999 திட்டம். மேலும் அப்பல்லோ 24/7 சர்கிள் (Apollo 24|7 Circle) சந்தா, இலவச ஹாலோ டியூன்ஸ் (Hellotunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5g data) போன்ற சலுகைகளை இந்த ஏர்டெல் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஏர்டெல் நிறுவனம் விரைவில் பல அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








