Home
News

Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? கம்மி பட்ஜெட்ல நெட்பிளிக்ஸ், ஜீ5, ஹாட்ஸ்டார்.. அன்லிமிமெட் சலுகைகள்..

ஜியோ நிறுவனத்துக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனம் புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் ஏர்டெல் நிறுவனம் கம்மி பட்ஜெட்டில் அதிக டேட்டா நன்மையுடன் ஓடிடி சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 598 Prepaid Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? கம்மி பட்ஜெட்ல நெட்பிளிக்ஸ், ஜீ5..

அதேபோல் பேஸிக் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா, ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் சந்தா, ஜீ5 பிரீமியம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் உள்ளிட்ட ஓடிடி சந்தா நன்மையை வழங்குகிறது ஏர்டெல் ரூ.598 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது

அதாவது அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.598 திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI), ஹலோ டியூன்ஸ் (Hello Tunes), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.838 ப்ரீபெய்ட்திட்டம் (Airtel Rs 838 prepaid Plan) ஆனது தினமும் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் .

குறிப்பாக 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) சந்தா வழங்கும் இந்த ரூ.838 திட்டம். அதேபோல் ஏர்டெல்எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தாவும் இந்த திட்டத்தில் உள்ளது. குறிப்பாக இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா மூலம் 22 ஓடிடி ஆப்ஸ்களை பயன்படுத்த முடியும்.

Airtel ரீசார்ஜ் பண்ண போறீங்களா? கம்மி பட்ஜெட்ல நெட்பிளிக்ஸ், ஜீ5..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஏர்டெல் ரூ.838 திட்டத்தில் வழங்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), பெர்ப்லெக்ஸிடி ப்ரோ ஏஐ (Perplexity Pro AI) உள்ளிட்ட நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. அதேபோல் டேட்டா நன்மை வேண்டாம் ஓடிடி சந்தா மட்டும் போதும் என நினைக்கும் பயனர்கள் ஏர்டெல் ரூ.279 திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.

ஏர்டெல் ரூ.279 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 279 Prepaid Plan) ஆனது 1ஜிபி டேட்டா நன்மை மட்டுமே வழங்கும். மேலும் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic), ஜியோஹாட்ஸ்டார் சூப்பர் (JioHotstar Super), ஜீ5 பிரீமியம் (ZEE5 Premium), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) போன்றவற்றின் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடையாது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel prepaid plans offer Netflix and Amazon Prime subscriptions at low prices: check detail
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X