ஏர்டெல் பயனர்களுக்கு செம ட்ரீட்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. ஹாட்ஸ்டார்.. மிஸ் பண்ணாதீங்க..
ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் பட்ஜெட் விலையில் ஓடிடி நன்மைகளுடன் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
அதேபோல் ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சேவையும் அனைத்து இடங்களிலும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் அதாவது ஏர்டெல் நிறுவனம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இப்போது இந்த திட்டங்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் (airtel rs 499 plan) திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா கிடைக்கும். அதேபோல் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல அசத்தலான சலுகைகளை வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த திட்டம் அதிக நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் (airtel rs 869 plan) திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படும். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டம்.
அதாவது ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் RewardsMini சந்தா வழங்கப்படுகிறது. பின்பு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் வழங்கும் ரூ.3359 ப்ரீபெயட் திட்டம் (airtel rs 3359 plan) தினமும் 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் சலுகைகளை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்கிரிப்ஷனை வழங்குகிறது ஏர்டெல் ரூ.3,359 ப்ரீபெயட் திட்டம். மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) மெம்பர்ஷிப் உள்ளிட்ட அசத்தலான சலுகைகள் வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.3,359 ப்ரீபெயட் திட்டம்.
அதேபோல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் ரூ.1499 விலையில் கிடைக்கும் நெட்பிளிக்ஸ் சந்தா திட்டத்தை தேர்வு செய்யவும். அதாவது ஏர்டெல் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாள் ஆகும். பின்பு தினமும் 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல சலுகைகள் இந்த ஏர்டெல் ரூ.1499 திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








