Just In
- 58 min ago
வான் பாதுகாப்பை ஊடுருவும் புதிய ஸ்டெல்த் பாம்பர் B-21 ரைடர் விமானம்.. வேகமாக ரெடியாகும் அமெரிக்கா..
- 2 hrs ago
ஸ்பைஸ்ஜெட்: ரேன்சம்வேர் சைபர் தாக்குதல்- விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.!
- 4 hrs ago
உங்கள் Facebook கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
- 5 hrs ago
அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஒப்போ, லாவா, சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
Don't Miss
- Movies
விஜய் பட நடிகையா இது? விதவிதமா பிகினியில் இப்படி மிரட்டுறாங்களே.. சம்மருக்கு சரியான சாய்ஸ்!
- News
பெண் பாலத்காரம்! கொன்று எரித்த வடமாநில இளைஞர்கள்! மக்களின் ஆவேச போராட்டத்தால் ஸ்தம்பித்த ராமேஸ்வரம்
- Sports
மும்பை அணியில் அர்ஜூனுக்கு வாய்ப்பு ஏன் இல்லை.. மௌனத்தை கலைத்த சச்சின்.. அணி தேர்வு குறித்து கருத்து
- Automobiles
ரயில்களின் கடைசி பெட்டியில் LV என்ற போர்டு தொங்கும்... இதுக்கு பின்னாடி இவ்ளோ பெரிய விஷயம் மறஞ்சிருக்கா?
- Finance
அதானி கொடுக்கபோகும் சர்பிரைஸ்.. யாருக்கெல்லாம் பலன் கிடைக்கலாம்?
- Lifestyle
புதன்கிழமைகளில் மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க... இல்லன்னா பண கஷ்டத்தை சந்திப்பீங்க...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
OTT நன்மைகளுடன் கிடைக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்.! முழு விவரம்.!
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் சில ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் ப்ரீபெய்ட திட்டங்களில் சலுகைகளை வழங்கியது. குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. அதன்பின்பு இந்நிறுவனங்கள் அவ்வப்போது சில சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் OTT நன்மைகளுடன் பல ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டங்கள்
அனைத்தும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் இப்போது OTT நன்மைகளை வழங்கும் ஏர்டெல் நிறுவனத்தின்மூன்று பெரிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது அமேசான் பிரைம் மெம்பர்ஷிப்பை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் பிரைம் மெம்பர்ஷிப்பும் 56 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதேபோல் தினசரி 3ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Thanks நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மகத்தான முன்னேற்றம்- ரூ.2770 கோடிக்கு இந்திய தயாரிப்பு பிரம்மோஸ் ஏவுகணை ஆர்டர் செய்த பிலிப்பைன்ஸ்!

ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் இந்த திட்டம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவுடன் வருகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. அதேபோல் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Thanks நன்மைகள் இந்த ஏர்டெல் ரூ.838 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிஎஸ்என்எல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் ரூ.184, ரூ.185, ரூ.186 மற்றும் ரூ.347 என்ற விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஒவ்வொரு திட்டங்களின் விவரங்களையும் முழுமையாக பார்க்கலாம். ரூ.184 ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்புகள் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. அதேபோல் ரூ.185 மற்றும் ரூ.186 திட்டங்கள்தினசரி 1 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது. இந்த மூன்று திட்டங்களும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. வழங்கப்பட்ட வரம்புக் கொள்கை முடிந்த பின் இந்த திட்டத்தில் இணைய வேகம் 80 கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

திட்டங்களில் இருக்கும் வித்தியாசம்
ஆனால் இந்த திட்டங்களில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற கேள்வி வரலாம். அதற்கான பதில் குறித்து பார்க்கையில், ரூ.184 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் Lystn போட்காஸ்டின் கூடுதல் பலனை பெறுவார்கள். ரூ.185 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் மற்றும் BSNL ட்யூன்ஸ் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவையை இணைந்து பெறுவார்கள். அதேபோல் ரூ.186 திட்டத்தில் மேலே வழங்கப்பட்ட தொகுப்புகளுடன் கூடுதலாக
ஹார்டி கேம்ஸ் மற்றும் பிஎஸ்என்எல் டியூன்களின் கூடுதல் பலன்களை பெறுவார்கள்.

ரூ.347 ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளை பெறுவார்கள். இந்த திட்டம் பயனர்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை வழங்குகிறது. இந்த திட்டத்தில் M/S ஆன்மொபைல் குளோபல் லிமிடெட் வழங்கும் ப்ரோக்ரஸிவ் வெப் APP (PWA)-ன் அரீனா மொபைல் கேமிங் சேவை அணுகல் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகின்றன.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999