மிரட்டிவிட்ட Airtel.. ரூ.399 விலை முதல்.. தினமும் 3GB டேட்டா.. Disney+ Hotstar சந்தா.. அமேசான் Prime Video சந்
ஏர்டெல் (Airtel) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு டேட்டா பற்றாக்குறை இல்லாமல் இருக்க தினமும் 3ஜிபி டேட்டா (3GB Data) கிடைக்கும் ஹெவி டேட்டா ப்ரீபெய்ட் திட்டங்களை (Heavy Data Prepadi Plans) வழங்குகிறது. இந்த திட்டங்களுடன் பல கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கீழ் பல விதமான டேட்டா நன்மைகளை அடக்கிய ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், ஹெவி டேட்டா யுஸர்களை கவர்ந்த தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்த பட்டியலில் மலிவு விலை முதல் பட்ஜெட் விலை வரை கிடைக்கும் பட்டியலை காணலாம்.

1. ஏர்டெல் ரூ. 399 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 399 Prepaid Plan):
இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையுடன் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. கூடுதல் நன்மைகளாக, இதனுடன் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) நன்மைகளை வழங்குகிறது.
அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), விங்க் மியூசிக் (Wynk Music), இலவச ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) நன்மைகளை வழங்குகிறது. இதில், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play) உங்களுக்கு 15+ வகையான OTT சேனல்களுக்கான சந்தாவை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
2. ஏர்டெல் ரூ. 499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 499 Prepaid Plan):
முன்பு பார்த்த ப்ரீபெய்ட் திட்டத்தை விட இது வெறும் ரூ.100 விலை மட்டுமே அதிகம். இந்த திட்டமும் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் அதே நன்மைகளை அப்படியே வழங்குகிறது. தினசரி 3ஜிபி டேட்டா முதல் துவங்கி வேலிடிட்டி வரை எல்லாம் ஒரே மாதிரியானவை. ஆனால், கூடுதல் சேர்ப்பாக இந்த திட்டத்துடன் உங்களுக்கு 3 மாதம் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (Disney+ Hotstar Mobile Subscription) கிடைக்கிறது.
3. ஏர்டெல் ரூ. 699 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Airtel Rs 699 Prepaid Plan):
இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 56 நாட்களாகும். இதில் உங்களுக்கு தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS, அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மை, ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே (Airtel Xstream Play), அப்பல்லோ 24|7 சர்க்கிள் (Apollo 24|7 Circle), விங்க் மியூசிக் (Wynk Music), இலவச ஹலோ டியூன்ஸ் (Free Hello Tunes) போன்ற நன்மைகள் கிடைக்கிறது.
இந்த திட்டம் உங்களுக்கு கூடுதல் இலவச நன்மையாக அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (Amazon Prime Membership) சந்தாவை 56 நாட்கள் செல்லுபடியாகும் விதத்தில் வழங்குகிறது. அமேசான் பிரைம் சந்தா எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ப்ரீபெய்டு திட்டம் சிறந்தது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா எதிர்பார்ப்பவர்களுக்கு ரூ.499 திட்டம் சிறந்தது.


Click it and Unblock the Notifications








