Home
News

Airtel 200 ரூபாய்க்குள் ட்ரீட்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 100 SMS.. எந்த பிளான்? எத்தனை நாட்களுக்கு?

ஏர்டெல் (Airtel) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இப்போது புதிதாக ரூ. 200 விலைக்குள் ஒரு புதிய மலிவு விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், ஏர்டெல் நிறுவனம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பது போல, அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் மற்றும் தனியார் ஜாம்பவானான ஜியோ (Jio) நிறுவனத்திற்கு போட்டியாக இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இத்துடன் ஏர்டெல் நிறுவனம் இப்போது பட்ஜெட் பிரியர்களை கவரும் ஒரு புதிய திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அது பற்றிய கூடுதல் விபரங்கள் இதோ.

மக்கள் இப்போது மலிவு விலையில் நியாயமான நன்மை கிடைக்கும் திட்டங்களை மட்டுமே ரீசார்ஜ் செய்ய விரும்புகிறார்கள். இதனால், டெலிகாம் நிறுவனங்கள் (Telecom companies) தற்போது அவற்றின் திட்டங்களில் அடிக்கடி விலை மாற்றம் மற்றும் நன்மை மாற்றங்களை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. இந்த வரிசையில், ரூ. 200 விலைக்குள் சிறந்த திட்டங்களை தேடும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையில், ஏர்டெல் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

Airtel 200 ரூபாய்க்குள் ட்ரீட்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்..

Airtel 200 ரூபாய்க்குள் ட்ரீட்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 100 SMS:

ஏர்டெல் ரூ. 199 திட்டம் (Airtel Rs 199 Plan):

ஏர்டெல் நிறுவனம் ரூ. 200 விலைக்குள் அறிமுகம் செய்துள்ள புதிய ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் (Airtel prepaid plan) தான் ஏர்டெல் ரூ. 199 திட்டம் (Airtel Rs 199 Plan) ஆகும். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை எந்தவித தடையுமின்றி அதன் பயனருக்கு வழங்குகிறது.

இந்த திட்டம் 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இது தினசரி டேட்டா நன்மை இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். இந்த புதிய ஏர்டெல் 199 பிளான் (Airtel 199 Plan) தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது. மலிவு விலையில் டீசெண்டான நன்மைகளை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் சிறந்த தேர்வாக அமைகிறது.

ஏர்டெல் ரூ. 489 திட்டம் (Airtel Rs 489 Plan):

இந்த திட்டத்துடன் ஏர்டெல் நிறுவனம் இப்போது மற்றொரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டமானது ஏர்டெல் ரூ. 489 திட்டம் (Airtel Rs 489 Plan) என்ற பெயருடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 77 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Airtel 77 days validity plan) நன்மையுடன் வருகிறது.

இந்த திட்டம் 77 நாட்களுக்கு தடையில்லாத அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இதில் லோக்கல், STD மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் சேவைகள் என்று அனைத்து நெட்வொர்க்கிற்கும் இலவசமான அன்லிமிடெட் கால்ஸ் சேவையை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தமாக 6GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 900 SMS நன்மையையும் வழங்குகிறது. பட்ஜெட் விலையில் 77 நாட்களுக்கு சிறந்த திட்டமாக இது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Prepaid Plan Under Rs 200 and Budget Plan Launched With Rs 489 Benefits Check Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X