அள்ளி கொடுக்கும் Airtel பிளான்.. தினமும் 3ஜிபி டேட்டா.. அமேசான் பிரைம்.. விட்றாதீங்க..
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் வோடபோன் ஐடியா, ஜியோ நிறுவனங்களை விட சில ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது இந்நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ஓரு ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி மற்றும் கூடுதல் டேட்டா நன்மையை வழங்குகிறது. அந்த திட்டத்தை இந்த பதிவில் பார்க்கலாம்..
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 699 Prepaid Plan) தான் அந்த சலுகைகளை வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும 3ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. எனவே ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும்.

அதேபோல் அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் (amazon prime membership) வழங்குகிறது ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (Airtel Xstream Play) சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும். மேலும் இந்நிறுவனத்தின் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.
ஏர்டெல் ரூ 499 ப்ரீபெய்ட் திட்டம் (airtel rs 499 plan Details) ஆனது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) இலவச சந்தா வழங்குகிறது. குறிப்பாக தினமும் 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது இந்த திட்டம். பின்பு ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 84ஜிபி டேட்டா கிடைக்கும்.

மேலும் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் ( Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட பல நன்மைகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 869 ப்ரீபெய்ட் திட்டத்தில் (airtel rs 869 plan Details) தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே நீங்கள் இதில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். குறிப்பாக ஏர்டெல் ரூ.869 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மூன்று மாதங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படும்.

குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், RewardsMini சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), விங்க் மியூசிக் (Wynk Music), ப்ரீ ஹாலோடியூன்ஸ் (Free Hellotunes), அப்பல்லோ 24/7 சர்க்கிள் (apollo 24/7 circle) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஏர்டெல் ரூ.869 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் (Airtel Rs 999 Plan Details) 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2.5ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே சந்தா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா, விங்க் மியூசிக், ப்ரீ ஹாலோடியூன்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications