Airtel.in-ல் தொகுக்கபட்டுள்ள டாப் 5 ஏர்டெல் போஸ்ட்பெயிட் பிளான்ஸ்.!
அந்த பட்டியலில் நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் திட்டங்களான ரூ.399, ரூ.499, ரூ.649, ரூ.799, மற்றும் ரூ.1,199/- உள்ளன. இந்த ஐந்து திட்டங்களின் நன்மைகள் என்ன.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் தனது அதிகாரபூர்வமான வலைத்தளமான Airtel.in-ல் 'சிறந்த விற்பனையை சந்திக்கும் போஸ்ட்பெயிட் திட்டங்களின்' கீழ் கிடைக்கும் திட்டங்களில் டாப் 5 திட்டங்களை பற்றிய தொகுப்பே இது.

அந்த பட்டியலில் நிறுவனத்தின் போஸ்ட்பெயிட் திட்டங்களான ரூ.399, ரூ.499, ரூ.649, ரூ.799, மற்றும் ரூ.1,199/- உள்ளன. இந்த ஐந்து திட்டங்களின் நன்மைகள் என்ன.? என்பதை பற்றி விரிவாக காணலாம்.

ஏர்டெல் ரூ.399/-ன் நன்மைகள் :
ஏர்டெல் நிறுவனத்தின் பட்ஜெட் போஸ்ட்பெயிட் திட்டமான ரூ.399/- ஆனது மொத்தம் 20 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் டேட்டா ரோல் ஓவர் அம்சமும் அணுக கிடைக்கும், அதாவது குறிப்பிட்ட பில்லிங் சுழற்சியில் பயன்படுத்தப்படாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பரிமாற்றிக்கொள்ள முடியும். டேட்டாவை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்பு நன்மைகள் மற்றும் Wynk Music பயன்பாட்டிற்கான அணுகல் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.499/-ன் நன்மைகள் :
ஏர்டெல் நிறுவனத்தின் மற்றொரு பட்ஜெட் போஸ்ட்பெயிட் திட்டமான ரூ.499/- ஆனது மொத்தம் 40 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமும் டேட்டா ரோல் ஓவர் அம்சத்தை வழங்குகிறது. உடன் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்பு நன்மைகள், Wynk Music பயன்பாட்டிற்கான அணுகல் மற்றும் ஓராண்டு அமேசான் ப்ரைம் சாந்தா ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.649/-ன் நன்மைகள் :
ஏர்டெல் நிறுவனத்தின் சிறந்த போஸ்ட்பெயிட் திட்டங்களில் ஒன்றான ரூ.649/- ஆனது மொத்தம் 50 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடக்கம் டேட்டா ரோல் ஓவர் அம்சம் வழியாக அதிகபட்சம் 30ஜிபி அளவிலான டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பரிமாற்றிக்கொள்ள முடியும். டேட்டாவை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்பு நன்மைகள், Wynk Music பயன்பாட்டிற்கான அணுகல், அமேசான் ப்ரைம் சந்தா, இலவச ஆட்-ஆன் கனெக்ஷன் மற்றும் ஹேண்ட்செட் டேமேஜ் ப்ரொடெக்ஷன் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.


ஏர்டெல் ரூ.799/-ன் நன்மைகள் :
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.799 போஸ்ட்பெயிட் திட்டத்தின் கீழ், மொத்தம் 60 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடக்கம் டேட்டா ரோல் ஓவர் அம்சம் வழியாக அதிகபட்சம் 30ஜிபி அளவிலான டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பரிமாற்றிக்கொள்ள முடியும். டேட்டாவை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்பு நன்மைகள், Wynk Music பயன்பாட்டிற்கான அணுகல், அமேசான் ப்ரைம் சந்தா, இலவச ஆட்-ஆன் கனெக்ஷன் மற்றும் ஹேண்ட்செட் டேமேஜ் ப்ரொடெக்ஷன் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.1199/-ன் நன்மைகள் :
ஏர்டெல் நிறுவனத்தின் சிறந்த போஸ்ட்பெயிட் திட்டங்களில் ஒன்றான ரூ.1199/- ஆனது மொத்தம் 90 ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடக்கம் டேட்டா ரோல் ஓவர் அம்சம் வழியாக அதிகபட்சம் 30ஜிபி அளவிலான டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு பரிமாற்றிக்கொள்ள முடியும். டேட்டாவை தவிர்த்து இந்த திட்டத்தின் கீழ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர், எஸ்டிடி அழைப்பு நன்மைகள், Wynk Music பயன்பாட்டிற்கான அணுகல், அமேசான் ப்ரைம் சந்தா, இலவச ஆட்-ஆன் கனெக்ஷன் மற்றும் ஹேண்ட்செட் டேமேஜ் ப்ரொடெக்ஷன் ஆகிய நன்மைகளும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications