100GB டேட்டா.. 3 இலவச Airtel பேமிலி சிம்.. கூடவே கிடைக்கும் அல்டிமேட் அன்லிமிடெட் & OTT நன்மைகள்..
ஏர்டெல் (Airtel) வாடிக்கையாளர்களுக்கு வெளிவந்தது ஒரு அற்புதமான குட் நியூஸ், உங்களுக்கு கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு பத்தவில்லையா? தினசரி டேட்டா வரம்பு 3 ஜிபியாக இருந்தும் பற்றாக்குறையாக இருக்கிறதா? அப்போ கண்டிப்பாக இந்த 100ஜிபி திட்டத்தை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஏர்டெல் அதன் பயனர்களுக்கு பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், அதிக ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விரும்பி ரீசார்ஜ் (Airtel recharge) செய்த திட்டமாக இந்த 100 ஜிபி டேட்டா (100GB Data) திட்டம் திகழ்கிறது. இத்தகைய திட்டத்தை தான் நீங்களும் தேடுகிறீர்களானால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம் ரூ 999: (Airtel postpaid plan Rs 999)
இங்கு நாம் பார்க்கவிருக்கும் ஏர்டெல்லின் ரீசார்ஜ் திட்டமானது 100ஜிபி டேட்டாவைப் தருவதோடு, அமேசான் பிரைம் (Amazon Prime Videos), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) போன்ற OTT நன்மைகளுடன் வருகிறது. ஏர்டெல்லின் இந்த திட்டம் ரூ. 999 விலையில் போஸ்ட்பெய்டு திட்டமாக வருகிறது. ஆம், இங்கு நாம் பார்க்கும் திட்டம் போஸ்ட்பெய்டு (Airtel Postpaid Plan) திட்டமாகும்.
இந்த திட்டம் ஏர்டெல் நிறுவனம் 100ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் (Unlimited voice calling) மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) கிடைக்கும். இந்த திட்டத்தில் 200ஜிபி வரை டேட்டா ரோல்ஓவர் (200GB data rollover) வசதியும் உள்ளது. ஒரு முதன்மை சிம் தவிர, இந்த திட்டத்தில் 3 கூடுதல் இணைப்புகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்பதே இந்த திட்டத்தின் ஆகச்சிறந்த சிறப்பாகும்.
இந்த மூன்று ஆட் ஆன்களுடன் உங்களுக்கு கூடுதலாக 30 ஜிபி டேட்டா கிடைக்கும். மொத்தத்தில், இந்த திட்டத்தில் நான்கு இணைப்புகளைப் பெறுவீர்கள். நான்கு சிம் கார்டுகளுக்கும் அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை நீங்கள் பெறுவீர்கள். இன்னும் கூடுதல் நன்மையாக இந்த திட்டம் அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தாவை ஆறு மாதங்களுக்கு வழங்குகிறது.

அதேபோல், இந்த திட்டம் அன்லிமிடெட் என்டர்டைன்மெண்ட் நன்மையை வழங்குவதற்காக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது. இது மொபைல் பாதுகாப்பு, எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் (Airtel Xstream pack) மற்றும் Wynk பிரீமியம் மியூசிக் சந்தா ஆகியவற்றை இந்த திட்டத்துடன் சேர்த்து வழங்குகிறது.
ஏர்டெல் போஸ்ட்பெய்டு திட்டம் ரூ 599: (Airtel postpaid plan Rs 599)
இந்த திட்டம் உங்களுக்கு அதிக விலையாக தோன்றினால், இதை விட குறைந்த விலையிலும் ஏர்டெல் நிறுவனம் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டத்தை லிமிடட் நன்மைகளுடன் வழங்குகிறது. இந்த திட்டம் ரூ. 599 என்ற விலையில் வருகிறது. இது 75 ஜிபி டேட்டா (75GB data) நன்மையை வழங்குகிறது. இதுவும் முந்தைய திட்டத்தை போல 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் நன்மையை வழங்குகிறது.
இத்துடன் உங்களுக்கு கூடுதலாக 1 எக்ஸ்ட்ரா சிம் கார்டு வாங்க கிடைக்கிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் என்ற நன்மைகளை வழங்குகிறது. இதிலும் உங்களுக்கு கூடுதல் நன்மைகளாக OTT நன்மைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் அமேசான் பிரைம் வீடியோஸ் சந்தா கிடைக்கிறது. அதேபோல், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை வழங்குகிறது.
இது மொபைல் பாதுகாப்பு, எக்ஸ்ஸ்ட்ரீம் மொபைல் பேக் மற்றும் Wynk பிரீமியம் மியூசிக் சந்தா ஆகியவற்றை இந்த திட்டத்துடன் சேர்த்து வழங்குகிறது. இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்து அன்லிமிடெட் நன்மைகளை அனுபவித்துக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








