Home
News

Airtel SIM-க்கு கும்பிடு.. பழையபடி FREE டேட்டா.. போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் காட்டில் மழை.. எந்த திட்டம்?

ஏர்டெல் நிறுவனத்தின் 4ஜி சேவைகள் தொடங்கப்பட்ட போது, அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்பட்டது. பிறகு நாளுக்கு 1 ஜிபி டேட்டா, 2 ஜிபி டேட்டா என்று மாற்றப்பட்டது. அதேபோல போஸ்பெய்ட் கஸ்டமர்களுக்கு லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்பட்டது. இப்போது, போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4ஜி டேட்டா கொடுக்கப்படுகிறது.

அதாவது, போஸ்பெய்ட் திட்டத்தை (Postpaid) பெற்றால் போதும், 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) கொடுக்கப்படும். ஒருவேளை 5ஜி கஸ்டமர்களாக இருந்தால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, எந்த தினசரி லிமிட்டும் இந்த போஸ்பெய்ட் திட்டங்களுக்கு கிடையாது. ரூ.499 முதல் திட்டங்கள் கிடைக்கின்றன.

Airtel SIM-க்கு கும்பிடு.. பழையபடி FREE டேட்டா.. போஸ்ட்பெய்ட் திட்டம்!

இருப்பினும், பிரீமியம் ஓடிடி உள்ளிட்ட சலுகைகளுடன் கிடைக்கும் ஏர்டெல் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஏனென்றால், இதில் இலவசமாக 1 சிம் கார்டை இணைத்து கொள்ளலாம். இப்படி இணைக்கப்பட்ட சிம் கார்டுக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா உள்ளிட்ட சலுகைகள் கொடுக்கப்படும். ஒரே செலவில் 2 சிம் கார்டுகளை பயன்படுத்தலாம்.

ஏர்டெல் ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs.699 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 4ஜி (Unlimited 4G) மற்றும் அன்லிமிடெட் 5ஜி (Unlimitd 5G) டேட்டா கிடைக்கும். லோக்கல் (Local), எஸ்டிடி ரோமிங் (STD Roaming) உள்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை (Unlimited Voice Calls) போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கொடுக்கும். இந்த டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் 2 சிம் கார்டுகளுக்கும் பொருந்தும். அதாவது, பிரைமரி சிம் கார்டுக்கும் கூடுதலாக இணைக்கப்படும் சிம் கார்டுக்கும் இந்த சலுகைகள் கிடைக்கும். இப்போது, கூடுதல் சலுகைகளை பார்க்கலாம். இதில் ஃபாஸ்ட் லேன் டெக்னலாஜி (Fast Lane Technology), 5ஜி சிலைசிங் (5G Slicing) கிடைக்கிறது.

ஆகவே, 5ஜி கஸ்டமர்களுக்கு கூடுதல் நெட்வொர்க் என்ஹான்ஸ்மெண்ட் கிடைக்கும். அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தாவை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) மொபைல் சந்தாவை 1 வருடத்துக்கு பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவும் கிடைக்கிறது.

100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்படி கூகுள் ஒன் (Google One) சந்தா கிடைக்கிறது. 12 மாதங்களுக்கு பயன்படுத்தும்படி அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ப்ரீ ஹேலோ டியூன்ஸ் (Free Hello Tunes) மற்றும் ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு ஏர்டெல் போஸ்ட்பெய்ட் ரூ.449 திட்டத்துக்கு செல்லலாம்.

ஏர்டெல் ரூ.449 போஸ்ட்பெய்ட் திட்டம் (Airtel Rs.449 Postpaid Plan): இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் 1 சிம் கார்டுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும். அன்லிமிடெட் 4ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கின்றன. 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகின்றன. பிரீமியம் ஓடிடி ஆப்கள் கிடைக்காது.

இருப்பினும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் சந்தா கிடைக்கும். மற்ற சலுகைகளை பார்க்கையில், அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம், கூகுள் ஒன் கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ப்ரீ ஹேலோ டியூன்ஸ் கிடைக்கிறது. ப்ளூ ரிப்பன் பேக் கிடைக்கிறது. இது தொடக்க விலைக்கு கிடைக்கும் போஸ்ட்பெய்ட் திட்டமாக இருக்கிறது. முந்தைய திட்டம் தொடக்க விலை ஆட்-ஆன் சிம் கார்டு திட்டமாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Postpaid Plan With Unlimited Data Unlimited Voice Calls At Rs 699 Check Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X