Home
News

Airtel ஒரே போடு.. இனி 1 ரீசார்ஜ்.. 4 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்.. டேட்டா.. ஓடிடி சந்தா!

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் தனித்தனியாக மொபைல் ரீசார்ஜ் செய்வது பெரும் சுமையாக இருக்கும் நிலையில், பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக போஸ்ட்பெய்ட் திட்டங்கள் வழியாக முழு குடும்படுத்தும் ஒரே ரீசார்ஜில் சலுகைகளை கொடுக்கிறது. இதில் ஏர்டெல் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டம் அதிகமாக ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

ஒரே ரீசார்ஜில் 4 சிம் கார்டுகளுக்கு சலுகைகள்: இந்த திட்டத்தின் மிக முக்கிய சிறப்பம்சமாக, ஃபேமிலி சிம் கார்டு இணைப்பை சொல்லலாம். ஏனென்றால், இதில் 4 சிம்கார்டுகளுக்கு (SIMs) சலுகைகளை பெற்று கொள்ளலாம். அதாவது, உங்கள் குடும்பத்தில் உள்ள 3 நபர்களுக்கு தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமில்லை.

Airtel ஒரே போடு.. இனி 1 ரீசார்ஜ்.. 4 சிம் கார்டுகளுக்கு வேலிடிட்டி!

இந்த நம்பர்களுக்கும் சேர்த்து ஒரே கட்டணத்தில் நீங்கள் சலுகைகளை பெற முடியும். வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் மற்றும் டேட்டா போன்ற முக்கிய சலுகைகள் 4 சிம் கார்டுகளுக்கும் கிடைக்கும். இதில் 1 பிரைமரி சிம் கார்டு மற்றும் 3 பேமிலி நபர்களின் சிம் கார்டு அடங்கும். இப்படி 4 சிம் கார்டாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

அன்லிமிடெட் டேட்டா, அதிவேக இன்டர்நெட்: இந்த திட்டத்தில் கஸ்டமர்கள் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Unlimited 4G Data) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) பயன்படுத்த முடியும். குறிப்பாக, ஏர்டெல்லின் ஃபாஸ்ட் லேன்' (Fast Lane) தொழில்நுட்பம் மற்றும் 5ஜி ஸ்லைசிங் (5G Slicing) அணுகல்களும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஆகவே, மற்ற திட்டங்களைவிட இதில் மிக அதிவேகமான இன்டர்நெட் அனுபவத்தை பெறலாம். இதனுடன், அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local) மற்றும் எஸ்டிடி (STD) கால்களை செய்து கொள்ளலாம். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் இந்த திட்டத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

ஓடிடி ஆப்களின் சந்தா: இந்த திட்டத்தை வெறும் மொபைல் திட்டம் என்று மட்டுமே சொல்லிவிட முடியாது. இது ஒரு முழுமையான என்டர்டெயின்மென்ட் திட்டமாக இருக்கிறது. இதில் உள்ள கூடுதல் ஓடிடிகளை பார்க்கையில், 1 வருடத்திற்கான ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மொபைல் சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (Airtel Xstream Play Premium) சந்தாவும் கிடைக்கிறது. இதில் கூடுதலாக ஏகப்பட்ட ஓடிடி ஆப்களை பெற்று கொள்ள முடியும். ஆப்பிள் பிரியர்களுக்காக ஆப்பிள் டிவி (Apple TV) மற்றும் ஆப்பிள் மியூசிக் (Apple Music) சந்தாக்கள் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், 6 மாத காலத்திற்கு அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் இலவசமாக கொடுக்கப்பட்டு உள்ளது. 100 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கும்படி கூகுள் ஒன் (Google One) சந்தாவை இந்த போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுக்கிறது. அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (Adobe Express Premium) சந்தாவானது 12 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

இதுபோக இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் பயணங்களின் போது பயனுள்ள ப்ளூ ரிப்பன் பேக் (Blue Ribbon Bag) உள்ளிட்ட சலுகைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மோசடி இணையதள இணைப்புகளை தடுக்கும் வசதியான ப்ராடு லிங்க் பிளாக்கிங் (Fraud link blocking), ஸ்பேம் கால் மற்றும் ஓடிபி (OTP) டிடெக்சன் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Airtel Postpaid Family Rs 1199 Plan Per Month Unlimited Voice Calls For 4 SIM Cards Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X