Home
News

ஒருத்தர் ரீசாரஜ் செய்தால் போதும்.. 3 பேருக்கு டேட்டா, வாய்ஸ் கால்ஸ் இலவசம்.. ஏர்டெல் செம பிளான்..

ஏர்டெல் நிறுவனம் போஸ்ட்பெய்ட் திட்டங்களில் சில அசத்தலான சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் மற்ற நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் திட்டங்களை விட ஏர்டெல் நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனத்தின் மூன்று போஸ்ட்பெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதாவது ஒரு எண்ணுக்கு ஒரு திட்டத்தை ஆக்டிவேட் செய்தால் போதும் உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற நபர்களுக்கும் இலவசமாக டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல். அதாவது ஏர்டெல் ரூ.999, ரூ.1199, ரூ.1499 போஸ்ட்பெய்ட் ஃபேமிலி திட்டங்கள் (Airtel Postpaid Family Plans) தான் இத்தகைய நன்மைகளை வழங்குகின்றன. சரி இப்போது இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 190ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மற்றும் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் சந்தா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தில் ஒரு நபர் இந்த பிளானை வாங்கினால் போதும், மற்ற மூன்று நபர்களுக்கு இலவசமாக டேட்டா மற்றும் அழைப்புகள் கிடைக்கும்.

குறிப்பாக ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டத்தை வாங்குபவர் 100ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மற்ற 3 நபர்கள் தலா 30ஜிபி டேட்டா பலனை அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஏர்டெல் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம்.

குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 240ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தைத் தேர்வு செய்யும் பயனர்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மற்றும் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் சந்தா கிடைக்கும்.

இந்த ஏர்டெல் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ஒரு நபர் வாங்கினால், மற்ற மூன்று நபர்களுக்கு இலவச டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தை வாங்குபவர் 150 டேட்டாவையும் மற்றும் 3 நபர்கள் தலா 30 ஜிபி டேட்டா பலனை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டம் ஆனது 320ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் உள்ளன. அதேபோல் இந்த திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மற்றும் எக்ஸ்ட்ரீம் மொபைல் பேக் சந்தா கிடைக்கும்.

இந்த ஏர்டெல் ரூ.1499 போஸ்ட்பெய்ட் திட்டத்தை ஒரு நபர் வாங்கினால், மற்ற நான்கு நபர்களுக்கு இலவச டேட்டா மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தை வாங்குபவர் 200 டேட்டாவையும் மற்றும் 4 நபர்கள் தலா 30 ஜிபி டேட்டா பலனை அனுபவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் அதிக சலுகைகளை வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்..

குறிப்பாக இந்த மாதாந்திர போஸ்ட்பெய்டு திட்டங்கள் அனைத்தும் 30 நாட்களுக்கானவை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் பெறுவதற்கு ஏர்டெல் இணையதளம் அல்லது ஏர்டெல் ஸ்டோர்களை அணுகலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் போஸட்பெய்ட் ஃபேமிலி திட்டங்கள் குடும்பங்களுக்கு ஏற்ற பலன்களை வழங்குகின்றன. எனவே தான் இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களை அதிக பயனர்கள் தேர்வு செய்கின்றனர். மேலும் ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு அசத்தலான திட்டங்களை பட்ஜெட் விலையில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Postpaid Family Plans offer more benefits at lowest prices
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X