Home
News

OTT.. டெய்லி 3ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. பட்ஜெட் விலையில் அசத்தும் ஏர்டெல் திட்டங்கள்.. ஜியோ ஓரம்போ

ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் ரீசார்ஜ் உடன் சேர்த்து பிரபல ஓடிடி தளங்களின் சப்ஸ்க்ரிப்ஷனையும் வழங்குகின்றன. அப்படி ஓடிடி தளங்களின் சப்ஸ்க்ரிப்ஷன் உடன் கிடைக்கும் ஏர்டெல் திட்டங்களை இப்போது பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.499 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

OTT.. 3ஜிபி டேட்டா..  பட்ஜெட் விலையில் அசத்தும் ஏர்டெல் திட்டங்கள்..

ஏர்டெல் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் 56 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே, அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டம் 84 நாட்களுக்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரிப்ஷனை வழங்குகிறது. அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிளே அணுகல், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல சலுகைகள் கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ.3359 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி365 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், அப்பல்லோ 24|7 சர்க்கிள், விங்க் மியூசிக் பிரீமியம், இலவச ஹெலோட்யூன்ஸ் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்.

OTT.. 3ஜிபி டேட்டா..  பட்ஜெட் விலையில் அசத்தும் ஏர்டெல் திட்டங்கள்..

அதேபோல் ஏரடெல் நிறுவனம் வழங்கும் போஸ்பெய்ட் திட்டங்களிலும் ஓடிடி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.559 போஸ்பெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ செய்தால் மாதத்திற்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரிப்ஷனும், 1 வருடத்திற்கான டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷனும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.999 மற்றும் ரூ.1199 போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்தாலும் 6 மாதத்திற்கு அமேசான் ப்ரைம் சப்ஸ்க்ரிப்ஷன் மற்றும் 1 வருடத்திற்கான டிஸ்னி ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் கிடைக்கும். குறிப்பாக ஏர்டெல்லின் சாதாரண திட்டங்களை ரீசார்ஜ் செய்வதை விட ஓடிடி நன்மைகளை வழங்கும் திட்டங்களில் ரீசார்ஜ் செய்வது மிகவும் நல்லது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Airtel Postpaid and Prepaid plans with amazon prime and hotstar subscription: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X