திடீரென விலையை உயர்த்திய ஏர்டெல் நிறுவனம்.! பாவம்யா மக்கள்.!
மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 'ஸ்பெக்ட்ரம்' எனப்படும் அலைக்கற்றை அளவுக்கு ஏற்ப பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். மொபைல் போன் மற்றும் தொலைத் தொடர்பு சேவையின் மூலம் கிடைக்கும் வருவாயைத் தவிர மற்ற வழிகளில் கிடைக்கும் வருவாயையும் ஏ.ஜி.ஆர்., கணக்கில் சேர்க்க வேண்டும் என விதிமுறைகள் விதிக்கப்பட்டது.

1.33 லட்சம் கோடி
அதன்படி, பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிற தொலைதொடர்பு நிறுவனங்கள் மத்திய அரசுக்கு அளிக்க வேண்டிய உரிம கட்டணமான ரூ.92 ஆயிரம் கோடி மற்றும் ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு கட்டணமான ரூ. 41 ஆயிரம் கோடி என மொத்தம் 1.33 லட்சம் கோடி நிலுவையில் இருந்தது.

முழுமையாக செலுத்த வேண்டும்
ஏர்டெல் நிறுவனம் இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டாம் காலாண்டில் 23 ஆயிரத்து 45 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாக செலுத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் கடும் நெருக்கடி சந்தித்து வருவதாக ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிலுவைத் தொகையை ஜனவரி 20ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது வரை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அத்தொகையை முழுமையாகச் செலுத்தவில்லை. இதற்கிடையே, நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் வரை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என தொலைதொடர்பு துறையின் உரிம நிதிப்பிரிவு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தது.

மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும்
இந்த மனு நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் அதனை மதிக்காத தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். நிலுவைத் தொகையை, அடுத்த விசாரணை நடைபெறும் மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்திவிட வேண்டும் என்று தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும்,வரும் 20-ஆம் தேதிக்குள் 10 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்தி விடுவதாகவும், எஞ்சிய தொகையை மார்ச் 17ம் தேதிக்குள் செலுத்தி விடுவதாகவும் பாரதி ஏர்டெல் நிறுவனம் பதிலளித்திருந்தது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்..
இதையடுத்து, பார்தி எர்டெல் நிறுவனம் தான் செலுத்த வேண்டிய ஏறக்குறைய ரூ.45 ஆயிரம் கோடியில் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடியை இன்று தொலைத்தொடர்புத் துறையிடம் செலுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாரதி ஏர்டெல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "பாரதி எர்டெல், பார்தி ஹெக்ஸாகாம், டெலிநார் ஆகியவற்றின் சார்பில் இன்று ரூ.10 ஆயிரம் கோடி ஏஜிஆர் நிலுவைக் கட்டணத்தில் ஒருபகுதியைச் செலுத்திவிட்டோம். எங்களின் சுயமதிப்பீட்டுப் பணியை முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம், இதை முடித்தவுடன் உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக பணத்தைச் செலுத்திவிடுவோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவனத்துக்கு இன்னும் ஏஜிஆர் நிலுவைக் கட்டணமாக ரூ.35 ஆயிரத்து 586 கோடி செலுத்த வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

போஸ்ட்பெயிட்
அன்மையில் ஏர்டெல் நிறுவனம் தனது போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஆட் ஆன் சலுகையை அறிமுகம் செய்தது. இந்த திட்டதின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது சலுகையிலேயே குடும்பத்தாரை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இணைப்பாக சேர்த்துக் கொள்ள முடியும்.

புதிய விலை உயர்வு
அதன்படி ஏர்டெல் ஆட் ஆன் திட்டத்தின் ஆரம்ப விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்தது, தற்சமயம் விலை உயர்வை அடுத்து இதன் விலை ரூ.249-என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியா முழுக்க ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய விலை உயர்வு அமலாகி இருக்கிறது. பின்பு ஏர்டெல்போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர்களுக்கு விலை உயர்வு பற்றிய தகவல் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ரூ.249மட்டும் செலுத்தினால் போதும்
இருந்தபோதிலும் போஸ்ட்பெயிட் இணைப்பினை பயன்படுத்தும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் தங்களது குடும்பத்தார் அல்லது நண்பரை தங்களது குறைந்த விலை திட்டத்தில் இணைத்துக் கொள்ளமுடியும். அதாவது ரூ.499 மாத திட்டத்தை பயன்படுத்துவோர் தங்களது நண்பரை அதே திட்டத்தில் இணைக்கும் போது இரண்டாவது இணைப்பிற்கு
ரூ.249மட்டும் செலுத்தினால் போதும்.

ஆனால் ஏர்டெல் நிறுவனத்தின் ஆட் ஆன் திட்டத்தின் விலை ரூ.149 என நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது இதற்கான கட்டணம் ரூ.249 என மாற்றப்பட்டுள்ளது. இதுதவிர டேட்டாவுக்கு மட்டும் ரூ.99-விலையில் ஆட் ஆன் சலுகையை ஏர்டெல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








