Home
News

இறங்கி அடித்த Airtel.. வெறும் 199 ரூபாயில் 3GB டேட்டா.. SMS.. அன்லிமிடெட் காலிங்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?

கம்மி விலையில் உங்கள் சிம் கார்டை ஆக்டிவிடில் வைப்பதோடு, போதியளவு டேட்டா நன்மை, எஸ்எம்எஸ் நன்மை மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மை என்று எல்லாம் வேண்டுமா? அதுவும் ரூ.150 முதல் ரூ.199 விலைக்குள் வேண்டுமா? அப்படியானால் உடனே இந்த திட்டங்களை பாருங்கள்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel) இப்போது அதன் பயனர்களுக்கு மலிவு விலையில் சிறந்த நன்மைகளை அடக்கிய பெஸ்ட் பாக்கெட் பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Airtel pocket friendly prepaid recharge plans) கொண்டுள்ளது. அதில் குறிப்பாக இந்த விலை பிரிவின் கீழ் ஏர்டெல் நிறுவனம் 3 திட்டங்களை வழங்கி வருகிறது.

இறங்கி அடித்த Airtel.. வெறும் 199 ரூபாயில் 3GB டேட்டா.. காலிங்.. SMS..

இவை ஏர்டெல் ரூ.155 திட்டம் (Airtel Rs 155 Plan), ஏர்டெல் ரூ. 179 திட்டம் (Airtel Rs 179 Plan), மற்றும் ஏர்டெல் ரூ. 199 திட்டம் (Airtel Rs 199 Plan) என்ற விலைகளில் வருகிறது. இந்த திட்டங்கள் அதன் விலைக்கு ஏற்ப அதன் பயனர்களுக்கு டேட்டா நன்மை, எஸ்எம்எஸ் நன்மை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் நன்மைகளை 1 மாத வேலிடிட்டி வரை வழங்குகிறது.

சரி, இப்போது எந்தெந்த ஏர்டெல் திட்டங்கள் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது என்று பார்க்கலாம். முதலில் ஏர்டெல் வழங்கும் ரூ.155 திட்டத்தை பற்றி பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.155 திட்டம் (Airtel Rs 155 Plan):
ஏர்டெல் வழங்கும் ரூ.155 திட்டம் ஒரு என்ட்ரி லெவல் திட்டமாகும். அதாவது, கம்மி விலையில் கிடைக்கும் நுழைவு நிலை திட்டமாகும். இந்த திட்டம் 1ஜிபி டேட்டா (1GB data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் 300 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள் ஆகும். ஏர்டெல்லின் சிம்மை செயலில் வைத்திருக்க, இப்போது கிடைக்கும் குறைந்தபட்ச விலை கொண்ட ரீசார்ஜ் திட்டம் இதுவாகும்.

ஏர்டெல் ரூ. 179 திட்டம் (Airtel Rs 179 Plan):
பார்தி ஏர்டெல்லின் ரூ. 179 திட்டம் அதன் பயனர்களுக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் தேவையான டேட்டா நன்மையோடு, வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை (unlimited voice calls), 300 எஸ்எம்எஸ் நன்மை போன்றவற்றை கூடுதல் நன்மைகளாக வழங்குகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். முந்தைய திட்டத்தைவிட இதில் 1ஜிபி டேட்டா மற்றும் 4 நாள் வேலிடிட்டி கூடுதலாக கிடைக்கிறது.

ஏர்டெல் ரூ. 199 திட்டம் (Airtel Rs 199 Plan):
ஏர்டெல் வழங்கும் ரூ.199 திட்டமானது உங்களுக்கு 3ஜிபி டேட்டா (3GB data) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் உண்மையில் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. காரணம், வெறும் 199 ரூபாயில் இது டேட்டா நன்மையோடு, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. இது 300 எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி டேட்டா நன்மையோடு வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 30 நாட்கள் (validity) ஆகும்.

ஆம், இந்த திட்டம் முழுமையாக 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டமாக திகழ்கிறது. 1 மாத முழுமையான ரீசார்ஜ் திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஏர்டெல் வழங்கும் இந்த ரூ.199 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பாக்கெட் மணிக்கு பாதிப்பு இல்லாமல் குறைந்த செலவில் சிம் கார்டை ஆக்டிவிடில் வைப்பதோடு, உங்கள் தேவைக்கு ஏற்ற நன்மைகளை வழங்கும் இந்த திட்டங்களை மிஸ் செய்யாதீர்கள்.

Best Mobiles in India

English summary
Airtel pocket friendly prepaid recharge plans with 1GB 2GB and 3GB data benefit under Rs 200
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X